Edappadi Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் எடப்பாடி சட்டமன்ற தொகுதி.. இந்தமுறையும் வெற்றியை கைப்பற்றுவாரா எடப்பாடி பழனிசாமி? | TV9 Tamil News

Edappadi Constituency Election 2026: அதிமுகவின் கோட்டையாக இருக்கும் எடப்பாடி சட்டமன்ற தொகுதி.. இந்தமுறையும் வெற்றியை கைப்பற்றுவாரா எடப்பாடி பழனிசாமி?

Published: 

29 Mar 2026 18:01 PM

 IST

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி என்பது சேலம் மாவட்டம் அமைந்துள்ள ஒரு முக்கிய தொகுதியாகும். இது பொதுத் தொகுதியாகும். சேலம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். கிட்டத்தட்ட 2.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.

1 / 6எடப்பாடி சட்டமன்றத் தொகுதி என்பது சேலம் மாவட்டம் அமைந்துள்ள ஒரு முக்கிய தொகுதியாகும். இது பொதுத் தொகுதியாகும். சேலம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். கிட்டத்தட்ட 2.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி என்பது சேலம் மாவட்டம் அமைந்துள்ள ஒரு முக்கிய தொகுதியாகும். இது பொதுத் தொகுதியாகும். சேலம் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் கிராமப்புற வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். கிட்டத்தட்ட 2.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக கணிக்கப்படுகிறது.

2 / 6

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக வேட்பாளரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சுமார் 1,63,254 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் 69,352 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் நான்காவது இடத்தில் மக்கள் நீதி மையம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 / 6

எடப்பாடி தொகுதி பொதுவாக அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது. 1977ஆம் ஆண்டு முதல் இதுவரை கிட்டத்தட்ட ஆறு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 / 6

இந்த தொகுதி ஒரு முக்கிய விவசாயப் பகுதி ஆகும். குறிப்பாக நெல், கரும்பு, தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளைகின்றன. அதேபோல், பவர் லூம் மற்றும் நெசவு தொழில்களும் இங்கு அதிகமாக உள்ளன. அதிமுகவின் கோட்டையாக இருந்தாலும், மக்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சினைகள்: குடிநீர் தட்டுப்பாடு , சாலை வசதிகள் குறைவு, விவசாயத்திற்கு போதிய நீர் இல்லாமை, வேலைவாய்ப்பு குறைவு, மருத்துவ வசதிகள் மேம்படுத்தல் தேவைகள்

5 / 6

எடப்பாடி தொகுதி என்பது கிராமப்புற ஆதிக்கம் கொண்ட அரை நகர்ப்புற தொகுதியாகக் கருதப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால்: நாம் தமிழர் கட்சி – பிரியதர்ஷினி, தமிழக வெற்றி கழகம் – எம். அருண்குமார், அதிமுக – எடப்பாடி கே. பழனிசாமி, திமுக – காசி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

6 / 6

வெற்றி வாய்ப்பை எடுத்துக்கொண்டால், இந்த தொகுதியில் அதிமுகக்கு அதிக முன்னிலை காணப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக, இந்த முறையும் அதிமுக வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என அரசியல் நிலவரம் கூறுகிறது.

Follow Us