புதிய ஆடைகளை அணிவதற்கு முன் துவைப்பது ஏன் அவசியம்?

New Clothes Washing: புதிய ஆடைகளில் ரசாயனங்கள் இருக்கலாம். இந்த சாயங்கள் சரும அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதாலும் பலர் தொட்டதால் கிருமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாலும் புதிதாக வாங்கிய ஆடைகளைத் துவைத்த பின் போடுவது நல்லது. மேலும் குழந்தைகளுக்கு அதிக அபாயம் என்பதால் ஒருமுறை துவைத்தால் பாதுகாப்பு அதிகரிக்கும்.

புதிய ஆடைகளை அணிவதற்கு முன் துவைப்பது ஏன் அவசியம்?

புதிய ஆடைகள்

Published: 

21 Mar 2026 20:15 PM

 IST

புதிதாக வாங்கிய ஆடைகளைத் துவைக்காமல் அப்படியே அணிவது பலருக்கும் வழக்கமாக இருக்கலாம். ஆனால், அந்தப் பழக்கம் உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் சிக்கலை உண்டாக்கும் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். தினசரி வாழ்க்கையில் நாம் கவனிக்காத இந்தச் சிறிய பழக்கம், நீண்ட காலத்தில் தோல் பிரச்சினைகள், அலர்ஜி போன்றவற்றுக்கு வழிவகுக்கலாம். எனவே, புதிய ஆடைகளை அணிவதற்கு முன் அவற்றை துவைப்பது மிகவும் முக்கியமான ஒரு சுகாதார பழக்கமாக பார்க்கப்படுகிறது.

ரசாயன மிச்சங்கள் அபாயம்

தொழிற்சாலைகளில் ஆடைகளை உற்பத்தி செய்யும்போது, அவை சுருங்காமல் இருக்கவும், மடிப்புகள் கலையாமல் இருக்கவும் ஃபார்மால்டிஹைட் (Formaldehyde) போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் சருமத்தில் படும்போது அரிப்பு, சிவத்தல் அல்லது தோல் அழற்சியை ஏற்படுத்தக்கூடும். 2022ல் வெளியான ஆய்வில், 20 சதவீத புது ஆடையில் ஃபார்மால்டிஹைட் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது. ஆனால் ஒருமுறை நீரில் அலசியது மூலம் இந்த நச்சு முழுமையாக நீங்கியிருப்பதை உறுதி செய்கிறது. இதனால், புதிய ஆடைகளை துவைப்பது உடல் நலத்திற்கு பாதுகாப்பானதாகும்.

அதிகப்படியான சாயங்கள் பாதிப்பு

ஆடைகளில் உள்ள சாயம், சருமத்தில் நேரடியாக படும்போது, தோல் அழற்சியை ஏற்படுத்த செய்யலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக அடர் நிற ஆடைகளில் அதிகப்படியான சாயம் தேங்கியிருக்கும். இவை வியர்வையுடன் வினைப்புரியம் போது சரும துளைகள் வாயிலாக ஊடுருவ வாய்ப்புள்ளது. இதனால் சருமத்தில் அலர்ஜி, இரைச்சல் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். எனவே, புதிய ஆடைகளை முதல் முறையாக துவைப்பது இந்த அபாயத்தை குறைக்க உதவும்.

பாக்டீரியா மற்றும் கிருமிகள் பரவல்

நீங்க வாங்கிய ஆடைகள் கடைகளுக்கு வரும் முன்பு பலர் தொட்டிருக்கலாம் அல்லது ஆடையை பல நபர்கள் ட்ரையல் பார்த்திருக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவக்கூடும். குறிப்பாக பொது இடங்களில் விற்கப்படும் ஆடைகள் பலரின் கைகளால் தொட்டிருக்க வாய்ப்பு அதிகம். இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

குழந்தைகள் மற்றும் சென்சிட்டிவ் சருமம்

குழந்தைகள் மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்கள், புது ஆடைகளை அணியும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். அவர்களுக்கு எளிதாக சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் பரிந்துரைப்படி, குழந்தைகளுக்கான புதிய ஆடைகளை கட்டாயம் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது. இதனால், அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த வழிமுறை அவசியமாகிறது.

சரியான துவைக்கும் முறை

புது ஆடையை அணியும் முன்பு மென்மையான டிடர்ஜென்ட் பயன்படுத்தி வாஷ் செய்ய வேண்டும். நன்றாக அலசிவிட்டு காய வைக்கவும். அடர் மற்றும் லைட் நிறை ஆடைகளை தனித்தனியாக துவைப்பது நல்லது. உள்ளாடை, குழந்தைகள் உடை, ஜிம் உடைகளை கட்டாயம் கழுவ வேண்டும். சருமத்தில் நேரடியாக படாத ஜாக்கேட் போன்ற ஆடைகளை துவைக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆடைகள் சுத்தமாக இருந்தாலும், ஒருமுறை கழுவுதல் சரும ஆரோக்கியத்தை காப்பதோடு ஒட்டுமொத்த சுகாதாரத்தை பராமரிக்கும்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்