Headache: புதிய கண்ணாடி அணிந்தால் தலைவலி ஏன்? வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
Wear Glasses Headache: கண் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது மாறிவரும் போக்குகள் காரணமாக மக்கள் அடிக்கடி தங்கள் கண்ணாடிகளை மாற்றுகிறார்கள். அடிக்கடி கண்ணாடி அணிபவராக இருந்தால், உங்கள் கண்கள் நீர் வர தொடங்குவதையும், புதிய கண்ணாடி அணிந்த பிறகு தலைவலி ஏற்படுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம்.

தலைவலி
லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் செல்போனின் திரைகளை பார்ப்பது பெரும்பாலும் மக்களின் பார்வையை பலவீனப்படுத்தி, பார்வையான மங்கலாக்கும். இந்த சூல்நிலையில், மக்கள் பொதுவாக தங்கள் கண்களை பரிசோதித்து, பொருத்தமான சக்தியுடன் கண்ணாடிகளை (New Glasses) அணிவார்கள். இது எந்த பிரச்சனைகளை ஏற்படுத்தாது. இருப்பினும், கண் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது மாறிவரும் போக்குகள் காரணமாக மக்கள் அடிக்கடி தங்கள் கண்ணாடிகளை மாற்றுகிறார்கள். அடிக்கடி கண்ணாடி அணிபவராக இருந்தால், உங்கள் கண்கள் நீர் வர தொடங்குவதையும், புதிய கண்ணாடி அணிந்த பிறகு தலைவலி (Headache) ஏற்படுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். பெரும்பாலான மக்கள் புதிய கண்ணாடி அணிந்த பிறகு ஏன் தலைவலியை அனுபவிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: உஷார்.. மன அழுத்தம் ரிஸ்க்.. இதுவெல்லாம்தான் காரணம்!
புதிய கண்ணாடி அணிந்தால் தலைவலி ஏன் வருகிறது..?
- ஒருவர் தனியாக கண்ணாடி அணிந்த பிறகு, அவர்களுக்கு தலைவலி, தலைச்சுற்றல், பார்வை மங்கலானது மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புதிய கண்ணாடிகளுக்கு கண்களும் மூளையும் பழகுவதற்கு நேரம் எடுக்கும். குறைந்தபட்சம் முதல் சில வாரங்கள் மிகவும் கடினமாக இருக்கும். இதற்குப் பின்னால் சில குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன.
- உங்கள் கண்கள் இயற்கையான பார்வையை இழந்து கண்ணாடிகள் மூலம் வெளி உலகை பார்க்க தொடங்கும்போது, கண்களில் உள்ள தசைகள் கடினமாக உழைக்க வேண்டும். இது தசைப்பிடிப்பு மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும்.
- பைஃபோகல்ஸ், ட்ரைஃபோகல்ஸ், புரோக்ரெசிவ்ஸ் என வெவ்வேறு லென்ஸ்களை பயன்படுத்துவது தலைவலியை ஏற்படுத்தும். நீங்கள் அணியும் கண்ணாடி கிட்ட பார்வைக்கு உடையதாக இருந்தாலும் சரி, தூர பார்வைக்கு உடையதாக இருந்தாலும் சரி, அதற்கு உரிய லென்ஸ்களை பயன்படுத்தும்போது ஆரம்பத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
- விலையுயர்ந்த கண்ணாடிகளை வாங்குவதற்கு முன், அவை உங்கள் முகத்திற்கு சரியாகப் பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். கண்ணாடியின் சட்டகம் தளர்வாகவோ அல்லது உங்களுக்கு சரியாக பொருந்தவில்லை என்றால், அதாவது அது உங்கள் மூக்கு மற்றும் நெற்றியில் மிகவும் இறுக்கமாக இருந்தால் அழுத்தம் காரணமாக தலைவலி ஏற்படலாம்.
- உங்கள் கண் பார்வையின் திறன் குறைந்தாலோ அல்லது கூடினாலோ, அதற்கு ஏற்ப நீங்கள் கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் கண் தசைகள் முதலில் புதிய கண்ணாடிகளுக்கு ஏற்ப மாற்றுவதில் சிரமப்படுகின்றன. புதிய கண்ணாடிகளுக்கு ஏற்ப தசைகள் மிகவும் சுறுசுறுப்பாகின்றன. இது தலைவலியையும் அதிகரிக்கிறது.
- புதிய கண்ணாடி வாங்கியவுடன், பழைய கண்ணாடிகளை அணிய வேண்டாம். இருப்பினும், திடீரென கண்ணாடிகளை மாற்றுவது சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே மெதுவாக மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். காலப்போக்கில் இந்தப் பிரச்சினை நீங்கும்.
ALSO READ: மழைக்காலத்தில் கண் தொற்று பாதிப்பா..? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
புதிய கண்ணாடி அணியும்போது தலைவலி வராமல் இருக்க என்ன செய்யலாம்?
- முதலில், ஒரு நாளைக்கு சில மணிநேரம் புதிய கண்ணாடிகளை அணியுங்கள். சில மணிநேரம் பழைய கண்ணாடிகளை அணியுங்கள். படிப்படியாக இந்தக் காலத்தை அதிகரிக்கவும். இந்த பிரச்சினை நீண்ட காலம் தொடர்ந்து நீடித்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
- புதிய கண்ணாடி போட்ட பிறகு நீண்ட நேரம் திரையைப் பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் தொலைபேசி, மடிக்கணினி மற்றும் தொலைக்காட்சியைப் பார்க்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும். வேறு வழியில்லை என்றால், அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். இல்லையெனில், உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.