Sri Lanka Tourism: இலங்கைதான் டூர் பிளான்.. சுற்றுலாவுக்கு குவியும் இந்தியர்கள்…. அப்படி என்னதான் ஸ்பெஷல்?

Indian Tourists Sri Lanka: இலங்கையின் சுற்றுலாத் துறை, குறிப்பாக இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையால் மீண்டும் வளர்ச்சியடைந்து வருகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 3,35,000 இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்தியாவுடன், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணிகளின் வருகை அதிகம்.

Sri Lanka Tourism: இலங்கைதான் டூர் பிளான்.. சுற்றுலாவுக்கு குவியும் இந்தியர்கள்.... அப்படி என்னதான் ஸ்பெஷல்?

இலங்கை சுற்றுலாத்துறை

Updated On: 

09 Sep 2025 15:59 PM

 IST

இலங்கையில் உள்ள சுற்றுலாத்துறை (Sri Lanka Tourism) மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. இதற்கு இந்தியா மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது, இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை இலங்கையில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல இந்தியர்கள் (Indian tourists) இப்போது இலங்கையில் உள்ள இடங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இலங்கை இந்திய பயணிகளிடையே அதிகரித்து வரும் பிரபலமான இடமாக உருவெடுத்துள்ளது. 2025ம் ஆண்டில் இந்திய பயணிகள் பழமையான, கலாச்சார கண்டுபிடிப்பு, நினைவு சின்னங்கள் மற்றும் நல்வாழ்வு அனுபவங்கள் இரண்டையும் இணைக்கும் பயணங்களுக்கு அதிகமாக விரும்புகின்றனர்.

நெருக்கடியில் இருந்து மீண்டும் வரும் இலங்கை:

இலங்கையின் சுற்றுலாவின் வளர்ச்சி, நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதை குறிக்கிறது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் கடந்த 2025ம் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் சர்வதேச வருகையாளர்களின் எண்ணிக்கையில் 20.4 சதவீதத்திற்கு சமமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும், இந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,98,253 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிந்துள்ளது.

2025ம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இலங்கைக்கு இந்தியாவில் இருந்து 3,35,000 பேரும், இங்கிலாந்தில் இருந்து 1,54,000 பேரும் சுற்றுலா சென்றுள்ளனர். அதேநேரத்தில், 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 37,494 சர்வதேச சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர்.

ALSO READ: உலகின் பழமையான நாடு எது? – இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா அல்ல… ஆச்சரியப்படுத்தும் புதிய நாடு எது?

இந்திய சுற்றுலா பயணிகளின் தாக்கம்:


2025 ஆகஸ்ட் வாக்கில் வெளிநாட்டு வருகை பிரிவில் இந்திய சுற்றுலா பயணிகளே இலங்கை நாட்டிற்கு சென்றுள்ளனர். அதாவது, 46,473 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டனர். அதற்கும் மேலாக, ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், 325,595 இந்திய சுற்றுலாப் பயணிகள் மொத்த வெளிநாட்டு வருகையில் கிட்டத்தட்ட 3ல் ஒரு பங்கைக் கொண்டிருந்தனர். ஆகஸ்ட் 2025 இறுதிக்குள் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வருகையுடன், இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை சுற்றுலாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகச் செயல்பட்டுள்ளனர்.

இந்தியாவை தவிர, பிற சர்வதேச நாடுகளும் இலங்கை சுற்றுலா வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. 2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுடன் சேர்ந்து இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை மிகவும் பிரபலமான வெளிநாட்டு நாடுகளாக இருந்தன. 2025 ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் இருந்து 17,764 பேரும், ஜெர்மன் நாட்டில் இருந்து 12,500 பேரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ALSO READ: மழைக்காலத்தில் வாகனம் ஓட்டும் நபரா நீங்கள்..? இந்த விஷயங்களில் கவனம்!

இந்திய பயணிகளுக்கு மிகவும் விருப்பமான சுற்றுலாத் தலமாக இலங்கை தொடர்ந்து உள்ளது. எதிர்காலத்தில், இலங்கை தனது சுற்றுலாத் துறையில் வளர்ச்சிக்கு இன்னும் இடமுள்ளது. இலங்கைக்கு இந்திய பயணிகளுடன், பிற சர்வதேச நாடுகளின் பயணிகளின் பயணம் இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. அதன்படி, இலங்கை வழங்க வேண்டிய சுற்றுலா உள்கட்டமைப்பில் மேலும் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.