R Madhavan’s Anti-Aging Secrets: 55 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி..? ரகசியத்தை சொன்ன நடிகர் மாதவன்!

R Madhavan Skincare Routine: நடிகர் மாதவன் தனது 55வது வயதிலும் இளமையாகத் தோன்றுவதற்கான ரகசியத்தை GQ இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். சூரிய ஒளி, இளநீர், சைவ உணவு மற்றும் எளிமையான வாழ்க்கை முறை ஆகியவை இதற்குக் காரணம் என்கிறார். பிரைட் ஃபுட்ஸ் மற்றும் மதுவைத் தவிர்த்தல், சரியான நேரத்தில் சாப்பிடுதல் போன்றவற்றையும் அவர் முக்கியமாகக் கூறியுள்ளார்.

R Madhavans Anti-Aging Secrets: 55 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி..? ரகசியத்தை சொன்ன நடிகர் மாதவன்!

நடிகர் மாதவன்

Updated On: 

17 Jul 2025 21:36 PM

நடிகர் மாதவன் (Actor Madhavan) இன்னும் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா என்று சாக்லேட் பாயாக தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2025 ஜூன் 1ம் தேதியுடன் மாதவனுக்கு 55 வயது நிறைவடைந்தாலும், இன்னும் இளமையாகவே (Anti-Aging Secrets) தோற்றமளிக்கிறார். இந்தநிலையில், கடந்த ஜூலை 7ம் தேதி நடிகர் மாதவன் GQ இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தனது சரும பராமரிப்பு குறித்து பேசினார். அதில், நல்ல சருமத்தை பெற, சூரிய ஒளியை (Sun Light) முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், சுருக்கங்கள் மற்றும் சரும சேதத்தை தடுக்க இது அவசியம் என்று தெரிவித்தார்.

மாதவன் சொன்ன அந்த இது என்ன..?

மாதவன் எப்போது சூரிய ஒளியை வெறுப்பவர் அல்ல, காலையில் கிடைக்கும் மிதமான சூரிய ஒளியானது மனநிலைய மேம்படுத்தி வைட்டமின் டி அளவை அதிகரிக்கும். அதன்படி, ‘இளநீர், சூரிய ஒளி மற்றும் சைவ உணவு ஆகியவை தனது 55 வயதிலும் இளமையாக தோன்ற காரணமாக இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து பேசுகையில், “ நான் அதிகாலை வெயிலில் கோல்ஃப் விளையாடுவேன். எனக்கு அதிகாலையில் சூரிய ஒளி நல்ல மனநிலையும், வைட்டமின் டியை தருகிறது. சில சமயங்களில் முகத்திற்கு பேஷியல் செய்வேன். இது சருமத்தை இறுக்கமாக்கி சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. மேலும், தேங்காய் எண்ணெய், இளநீர், சூரிய ஒளி மற்றும் சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வேன். இது எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது.

ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக பருப்பு, பழைய சாதம் போன்ற எளிமையான உணவுகளை எடுத்துக்கொள்வேன். பிரைடு புட்ஸ் மற்றும் மது போன்றவற்றை எடுத்துக்கொள்ள மாட்டேன். நான் சிறிய வயதாக இருக்கும்போது, எங்கள் வீட்டில் ப்ரிட்ஜ் இருக்காது. அதனால், எப்போது அவ்வபோது சமைத்த பிரஸான உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வோம். இப்போது, அந்த பழக்கம் தொடர்கிறது. அதனால்தான், இப்போது வரை ஃபாஸ்ட் புட், பேக் செய்யப்பட்ட உணவுகளை என் உடம்பு ஏற்றுகொள்வது கிடையாது. நான் சூட்டிங் செல்லும்போது, என் அம்மா சமைக்கும் பருப்பு, காய்கறி உணவுகளை போன்று செய்ய என் சமையல்காரரையும் என்னுடன் அழைத்து செல்வேன்.

எடை குறைப்பு குறித்து மாதவன் பேசியது..

என் தாத்தா பாட்டி 92, 93 வயது வரைக்கும் வாழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு 3 வேளையும் சாதம் மட்டுமே சாப்பிட்டார்கள். முடிந்தவரை வறுத்த உணவுகளையும் மதுவையும் தவிர்க்கிறேன். நான் பசியாக இருக்கும்போது மட்டும்தான் சாப்பிடுவேன், மணிக்கணக்கில் சாப்பிட மாட்டேன். அதுதான் என்னை விழிப்புடனும், மகிழ்ச்சியாகவும், இளமையாகவும் வைத்திருக்கும்” என்று தெரிவித்தார்.