Pregnancy Hair Loss: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி உதிர காரணம் என்ன..? இதை செய்தால் தடுக்கலாமா..?

Preventing Hair Loss During Pregnancy: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனை முடி உதிர்தல். இது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படுகிறது. சமச்சீர் உணவு, எண்ணெய் மசாஜ் போன்றவை முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவும். இது தற்காலிகமானது, குழந்தை பிறந்த பிறகு சரியாகிவிடும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை முக்கியம்.

Pregnancy Hair Loss: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி உதிர காரணம் என்ன..? இதை செய்தால் தடுக்கலாமா..?

கர்ப்ப கால முடி உதிர்வு

Published: 

18 Jun 2025 15:40 PM

 IST

இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையிலும், பரபரப்பான சூழலிலும் பெரும்பாலான மக்கள் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்கிறார்கள். அதிலும், குறிப்பாக பெண்கள் கர்ப்ப காலத்தில் (Pregnancy) முடி உதிர்தல் பிரச்சனையை அதிகமாக எதிர்கொள்கிறார்கள். பல பெண்களும் இதை பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். கர்ப்ப காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனை (Hair Loss) என்பது பொதுவானது. இது உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தநிலையில், கர்ப்ப காலத்தில் முடி உதிர்வதற்கு என்ன காரணம்..? இவற்றை தடுப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.

கர்ப்ப காலத்தில் முடி உதிர காரணம் என்ன..?

ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 முதல் 100 முடிகள் வரை உதிரும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதால் இயற்கையான முடி நுண்குழாய்கள் விரிவடைந்து மெதுவாகிறது. இதன் விளைவாக, சில பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது குறைவாக முடியையும், சில பெண்கள் அதிக முடி இழப்பையும் சந்திக்கின்றன. இன்னும் ஒரு சில பெண்களுக்கு மன அழுத்தம் மர்றும் அதிர்ச்சி காரணமாக முடி மெலிந்து உதிர்தல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலைக்கு டெலோஜென் எஃப்ளூவியம் என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் முதல் 3 மாதங்களில் குழந்தைகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால் ஹார்மோன்களின் சமநிலையில் அதிகளவில் மாற்றம் ஏற்பட்டு, உடலில் மன அழுத்தம் ஏற்படும். இந்த மன அழுத்தம் பெண்களின் தலையில் உள்ள முடிகளில் 30 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை இழக்க செய்யும். எனவே, ஒரு நாளைக்கு சராசரியாக 100 முடிகளை இழப்பதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு 300 முடிகள் வரை இழக்கிறார்கள்.

கர்ப்பம் காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுவது தற்காலிகமானது. இதற்காக, பெண்கள் சிகிச்சையளிக்க வேண்டிய எந்த அவசியம் இல்லை. இது பொதுவாக குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள் முடி உதிர்தல் பிரச்சனை நின்றுவிடும். அப்படி இல்லையென்றால், முடி 1 வருடத்திற்குள் அதன் வழக்கமான தடிமனுக்கு கொண்டு வந்துவிடும்.

கர்ப்ப காலத்தில் முடி உதிர்தலை எவ்வாறு கட்டுப்படுத்துவது..?

ஆரோக்கிய உணவு:

கர்ப்ப காலத்தில் பெண்கள் சமச்சீரான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். அதன்படி பருப்பு வகைகள், முட்டை, பச்சை காய்கறிகள், பால் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். அதேநேரத்தில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம் போன்றவை முடி வளர்ச்சிக்கு அவசியம். இவற்றை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டாலே முடி உதிர்வு பிரச்சனையை தவிர்க்கலாம்.

எண்ணெய் பயன்படுத்துதல்:

கர்ப்ப காலத்தில் உங்கள் தலைமுடிக்கு தொடர்ந்து எண்ணெய் வைப்பது முக்கியம். அதன்படி தேங்காய் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் ஆகியவற்றை உங்கள் தலைமுடிக்கு வைக்கலாம். அதாவது, வாஅரத்திற்கு குறைந்தது 2 அல்லது 3 முறையாவது உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதன்மூலம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தலைமுடி உதிர்வதை தடுக்கும்.