Food Trip திட்டமிடுகிறீர்களா? மார்ச் 2026ல் திறந்த இந்தியாவின் புதிய உணவகங்கள் இதோ!

New Restaurants India 2026: மார்ச் 2026ல் இந்தியாவின் பல நகரங்களில் புதிய உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மும்பை, கோவா மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் உலகளாவிய மற்றும் பாரம்பரிய சுவைகள் இணைந்த உணவுகள் வழங்கப்படுகின்றன. புதிய உணவு அனுபவத்தை தேடும் விருந்தினர்களை இவ்வுணவகங்கள் அதிகமாக ஈர்த்து வருகின்றன.

Food Trip திட்டமிடுகிறீர்களா? மார்ச் 2026ல் திறந்த இந்தியாவின் புதிய உணவகங்கள் இதோ!

புதிய பிரபல உணவகங்கள்

Published: 

14 Mar 2026 17:00 PM

 IST

மார்ச் 2026 மாதத்தில் இந்தியாவின் பல நகரங்களில் பல புதிய உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மும்பையில் The Rameshwaram Cafe தென்னிந்திய பாரம்பரிய உணவுகளை வழங்கி கவனம் பெற்றுள்ளது.
Flint உணவகம் நேரடி தீயில் சமைக்கும் கிரில் மற்றும் ஸ்மோக் உணவுகளால் விருந்தினர்களை கவர்கிறது.
நடிகை மலாய்கா அரோரா இணைந்து தொடங்கிய Sweeney உணவகம் இயற்கை சூழலுடன் நவீன உணவு அனுபவத்தை வழங்குகிறது. கோவாவில் Vaarta உணவகம் இந்திய தெரு உணவுகளை புதுமையான முறையில் பரிமாறுகிறது. ஹைதராபாத்தில் Yuzu உணவகம் ஜப்பான்–பெரு சமையல் கலவையான நிக்கெய் பாணியில் சர்வதேச சுவைகளை அறிமுகப்படுத்துகிறது.

மும்பையில் தென்னிந்திய சுவையுடன் ‘The Rameshwaram Cafe’

மும்பை நகரில் தென்னிந்திய உணவுகளின் சுவையை அறிமுகப்படுத்தும் வகையில் The Rameshwaram Cafe புதிய கிளையைத் தொடங்கியுள்ளது. பெங்களூருவில் பிரபலமான இந்த கஃபே தற்போது மும்பை சர்ச்ச்கேட் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்தில் செயல்படுகிறது. கோவில் பாணி அலங்காரம், பித்தளை பொருட்கள் மற்றும் பாரம்பரிய ஓவியங்களால் இந்த இடம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு நெய் தோசை, இட்லி, பிசி பெளளி பாத், குங்குரா சாதம் மற்றும் ஃபில்டர் காபி போன்ற தென்னிந்திய உணவுகள் வழங்கப்படுவதால் காலை உணவுக்காக அதிக மக்கள் வருகை தருகின்றனர்.

தீயில் சமைக்கும் உணவு அனுபவம் – ‘Flint’

மும்பையில் தொடங்கப்பட்டுள்ள Flint உணவகம் நேரடி தீயில் சமைக்கும் உணவுகளுக்காக பிரபலமாகி வருகிறது. கிரில் மற்றும் ஸ்மோக் செய்யப்பட்ட உணவுகள் இந்த உணவகத்தின் முக்கிய சிறப்பாகும். புகை வாசனையுடன் வரும் மஷ்ரூம் பொட்ச்டிக்கர்கள், கிரில் ஹலோமி டாகோஸ், ஸ்மோக் சிக்கன் சாண்ட்விச்சு போன்ற பல்வேறு உணவுகள் மெனுவில் இடம்பெற்றுள்ளன. இனிப்புகளாக பாஸ்க் சீஸ் கேக் மற்றும் லெமன் திராமிசு போன்றவை வாடிக்கையாளர்களை கவர்கின்றன.

மலாய்கா அரோராவின் ‘Sweeney’ உணவகம்

மும்பையின் பாந்த்ரா பகுதியில் நடிகை மலாய்கா அரோரா இணைந்து தொடங்கியுள்ள Sweeney உணவகம் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஒரு நவீன உணவகமாகும். வெளிப்புற தோட்டம் மற்றும் அழகான விளக்குகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த இடம் அமைதியான உணவு அனுபவத்தை வழங்குகிறது. ஐரோப்பிய மற்றும் தாய் உணவுகள் கலந்து உருவாக்கப்பட்ட மெனுவில் கிராப் கேக், பைனாப்பிள் ரைஸ், ரோஸ்ட் சிக்கன் போன்ற பல்வேறு உணவுகள் இடம்பெற்றுள்ளன.

கோவாவில் தெரு உணவின் புதிய வடிவம் – ‘Vaarta’

கோவாவில் 160 ஆண்டுகள் பழமையான வீட்டை புதுப்பித்து Vaarta என்ற புதிய உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்திய தெரு உணவுகளை புதுமையான முறையில் வழங்குவது இதன் நோக்கம். புச்கா, கபாப், சிக்கன் குல்சா போன்ற உணவுகள் விருந்தினர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஹைதராபாத்தில் ஜப்பான்–பெரு சுவை ‘Yuzu’

ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள Yuzu உணவகம் ஜப்பான் மற்றும் பெரு சமையல் கலவையான “நிக்கெய்” பாணியில் உணவுகளை வழங்குகிறது. சுஷி, சாஷிமி, ரொபாடா கிரில் போன்ற உணவுகள் இங்கு முக்கியமாக வழங்கப்படுகின்றன. இதனால் சர்வதேச உணவு சுவையை அனுபவிக்க விரும்புவோருக்கு இது புதிய இடமாக மாறியுள்ளது.

Follow Us
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட பெண் உயிரோடு வந்ததால் பரபரப்பு - பிலிபித்தில் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்”
எரிவாயு தட்டுப்பாடு.. சிறிய உணவகங்கள் மூடல், கருப்புச் சந்தையில் சிலிண்டர் ரூ.3000 வரை உயர்வு..
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியாவுக்கு அனுமதி.. வெளிய்றவுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம்..
ஈராக் அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு