Namitha Pramod Fitness Secrets : பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் – நடிகை நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்

Namitha Pramod Fitness Secrets : தமிழில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நமீதா பிரமோத். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் பகலில் தான் விரும்பிய உணவுகளை சாப்பிடுவதாகவும் இரவில் எதுவும் சாப்பிடுவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

Namitha Pramod Fitness Secrets : பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நடிகை நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்

நமீதா பிரமோத்

Published: 

14 May 2025 23:33 PM

மலையாளத்தில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் நமீதா பிரமோத் (Namitha Pramod) வேளாங்கண்ணி மதவு என்ற சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பின்னர் பல சீரியல்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து டிராஃபிக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் தான் தமிழில் சென்னையில் ஒரு நாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்ட்டது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் கதாநாயகியாக பல படங்களில் நடித்தார். தமிழில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிமிர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நடிகை நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்

 

நமீதா உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தும் நடிகை என்பது அவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் நடிகை நமிதாவின் உடற்பயிற்சி ரகசியம் அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது ஜிஞ்சர் மீடியாவிற்கு  அவர் அளித்த பேட்டியில் அவரது உடற்பயிற்சி, உணவு முறை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து உரையாடியிருக்கிறார்.

அந்த பேட்டியில் நமீதா தான் எதையும் சாப்பிடும் ஒருவர் என்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ”காலையில், தோசை, இட்லி, ஆப்பம் உட்பட எனக்குப் பிடித்ததைச் சாப்பிடுவேன். மதிய உணவிற்கு அரிசி கட்டாயம். சாதத்துடன் நிறைய கறிகள் இருக்கும். காய்கறிகள் மிக அவசியம். மேலும் அவ்வப்போது மதிய உணவில் மீன்களும் இருக்கும். எனக்கு கோழிக்கறியை சாதத்துடன் சாப்பிடப் பிடிக்காது. எனக்கு  சைனீஸ் உணவுகள் பிடிக்கும் என்றார்.

இரவு உணவை தவிர்க்கும் நமீதா

 

”நான் வெளியில் இருந்து ஜங்க் ஃபுட் சாப்பிட விரும்பினால், அது எப்போதும் பகல் நேரத்தில் தான் சாப்பிடுவேன். நான் ராத்திரி அப்படி வெளியே சாப்பிட மாட்டேன். நான் காலையிலும் மாலையிலும் தேநீர் குடிப்பேன். மாலை 4-5 மணிக்கு, நான் தேநீருடன் ஒரு சிறிய சிற்றுண்டியாக நட்ஸ், பேரீச்சம்பழம் ஆகியவற்ற எடுத்துக்கொள்வேன். அன்றைய உணவு மாலை 5:30 மணி முதல் 6 மணிக்குள் முடிந்துவிடும். பின்னர் மறுநாள் காலையில் தான் சாப்பிடுவேன். நான் ராத்திரி எதுவும் சாப்பிட மாட்டேன்” என்கிறார்.

மேலும் இந்த டயட்டை யாரும் பின்பற்றக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கிறார். இந்த உணவு முறை தனது உடலுக்குப் பொருந்துவதால் அதனை பின்பற்றுவதாகவும் ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வித்தியாசமானது என்பதால் வேறு யாரும் அதனை பின்பற்ற வேண்டாம் என்கிறார். மேலும் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்குமாறும் அவர் கூறுகிறார்.