Monsoon Kitchen Hacks: ஈரப்பதத்தால் கெட்டுப்போகும் உப்பு… இந்த 3 பொருட்கள் புதுசாக வைக்கும்!
Keep Salt Dry in Rainy Season: மழைக்காலத்தில் உப்பு ஈரமாகி கட்டியாகிவிடுவதைத் தடுக்க, கிராம்பு, அரிசி, மற்றும் ராஜ்மா போன்ற பொருட்களைப் பயன்படுத்தலாம். கிராம்பின் வாசனை ஈரப்பதத்தைத் தடுக்கிறது, அரிசி ஈரத்தை உறிஞ்சிவிடும், ராஜ்மா ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. உப்பை காற்று புகாத பாத்திரத்தில், குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் வைப்பதும் அவசியம்.

உப்பு
கோடைக்காலம் முடிந்ததும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. மழைக்காலம் (Monsoon) வர தொடங்கியதும் நம் உடலில் காய்ச்சல், சளி போன்றவை ஏற்பட தொடங்குமோ..? அதேபோல், நம் வீட்டி சமையலறையிலும் ஈரப்பதம் அதன் வேலையை காட்ட தொடங்கும். அதன்படொ, சுவர்களில் ஈரப்பதம் ஏற்பட்டு சமையலறையில் ஈரப்பதம் உண்டாகி, நாம் வைத்திருக்கும் உப்பும் ஈரமாகி கட்டி சேர்ந்து கெட்டுப்போக தொடங்குகிறது. இருப்பினும், மழைக்காலத்தில் உப்பு (Salt) போன்றவற்றை பல மாதங்களாக ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க சில சமையலறை பொருட்கள் உள்ளன. இப்படி செய்வதன்மூலம், உப்பானது எப்போதும் புதியதாக இருக்கும். அதன்படி, என்ன செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கிராம்பு:
கிராம்பு ஈரப்பதம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க பெரிதும் உதவி செய்யும். கிராம்பில் இருந்து வெளியேறும் கடுமையான வாசனையானது ஈரப்பதத்தை உலர்த்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் உப்பையை கொட்டி வைக்கும் ஜார்களில் சில கிராம்புகளை போட்டு வைக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம், உப்பு கொட்டி வைக்கப்பட்டுள்ள ஜார் அல்லது பிளாஸ்டிக்கில் உள்ள ஈரப்பதம் நீக்கப்பட்டு, உப்பு நீண்ட நாட்கள் புதியது போன்று இருக்கும்.
ALSO READ: கோதுமை மாவு இப்படி பயன்படுத்தாதீங்க! இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!
அரிசி:
ஈரப்பதத்தை நீக்க அரிசியை பயன்படுத்துவது என்பது மிகவும் பொதுவான செய்முறையாகும். பெரும்பாலும் உணவகங்களிலும் இந்த முறை கையாளப்படுகிறது. பெரியவர்கள் காலம் காலமாக அரிசி ஈரப்பதத்தை நீக்கும் என்று கூறி வருகின்றனர். அதன்படி, உப்பை பாதுகாக்க ஒரு சிறிய வெள்ளை துணியை எடுத்து, பின்னர் அதில் ஒரு கைப்பிடி அரிசி தானியங்களை கொட்டி முடிச்சு போட்டு கொள்ளவும்.
இந்த அரிசி முடிச்சை உப்பு நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்திற்கு வைக்கவும். அப்போது, அரிசியானது உப்புக்குள் இருக்கும் கூடுதல் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். உப்பை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க இதுவே சிறந்த வழி.
ராஜ்மா/ கிட்னி பீன்ஸ்:
ராஜ்மா என்று அழைக்கப்படும் கிட்னி பீன்ஸ் ஈரப்பதத்தை உறிஞ்சும் பண்புகளையும் கொண்டுள்ளது. ஒரு கைப்பிடி உலர்ந்த கிட்னி பீன்ஸை ஒரு சிறிய வெள்ளை துணியில் உப்பு வைக்கப்பட்டுள்ள ஜாருக்குள் வைக்கவும். அப்போது, கிட்னி பீன்ஸானது அதிகப்படியான ஈரப்பதத்தை இயற்கையாகவே நீக்கும்
ALSO READ: சமையலறையில் ஸ்மார்ட்டா இருக்கணுமா? இதை செய்யுங்கள்…
மேலும், ஈரப்பதம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க, சமையலறையில் குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் உப்பு போன்றவற்றை வைப்பது பாதுகாப்பானது. அதேநேரத்தில், அடுப்பு அல்லது சிங்க்கின் அருகே உப்பை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். உப்பை காற்று புகாத கண்ணாடி ஜார்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உப்பை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க முடியும்.