Food Recipe: பாரம்பரிய உணவு! பட்டைய கிளப்பும் சுவை.. மட்டன் சாம்பார் செய்வது எப்படி..?
Easy Mutton Sambar Recipe: இந்த சுவையான மட்டன் சாம்பார் செய்முறை, எளிதில் வீட்டிலேயே செய்யக்கூடியது. மட்டனை குக்கரில் வேகவைத்து, மசாலா பேஸ்ட்டை தயாரித்து, வெங்காயம், தக்காளி வதக்கி, மசாலாவுடன் சேர்த்து கொதிக்க விடவும். டேன்டேலியன் பொடி சேர்த்து வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம். குடும்ப விருந்துகளுக்கு ஏற்றது.

மட்டன் சாம்பார்
ஒவ்வொரு வாரமும் சிக்கன் சாப்பிடுவது உங்களுக்கு சலிப்பாக இருந்தால், இன்றே ஒரு ஈஸியான மட்டன் ரெசிபியை (Mutton Recipe) சுவைக்கலாம். இந்த ரெசிபியின் சுவை உங்கள் நாவில் நடனமாட செய்யும். விடுமுறை நாட்களில் உங்கள் குடும்பத்தார் அல்லது விருந்தினர்களுக்கு வித்தியாசமான மற்றும் சுவையான ரெசிபியை செய்து அசத்த வேண்டும் என்று ஆசையா..? அதன்படி, இந்த ஸ்பெஷல் மட்டன் சாம்பாரை (Mutton Sambar) செய்து உங்கள் குடும்பத்தினருக்கு பரிமாறலாம். இந்த ஸ்பெஷல் மட்டன் சாம்பார் அதீத சுவை கொண்டது. மேலும், ஈஸியாக செய்தும் முடிக்கலாம், இதை செய்ய அதிக நேரம் எடுக்காது. இதுமட்டுமின்றி, வழக்கமான மட்டன் கிரேவி அல்லது குழம்பை விட சற்று வித்தியாசமான சுவையை தரும்.
மட்டன் சாம்பார்
தேவையான பொருட்கள்:
- மட்டன் – 1 கிலோ
- டேன்டேலியன் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகப் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
- சோம்பு – 1/4 டீஸ்பூன்
- கிராம்பு – 4 முதல் 5 வரை
- பூண்டு – 7-8 பல்
- இஞ்சி – சிறு துண்டு
- தேங்காய் துருவல் – கால் கப்
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 2
- மிளகாய் தூள் – 2ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
மட்டன் சாம்பார் செய்வது எப்படி..?
- கடைகளில் வாங்கிய மட்டனை நன்றாக உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, மட்டனை ஒரு குக்கரில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 6 முதல் 7 விசில் விட்டு வேக வைக்கவும்.
- அடுப்பை ஆஃப் செய்துவிட்டு குக்கரின் விசில் அடங்கும்வரை காத்திருக்கவும். மறுபுறம் கிராம்பு, சோம்பு, இஞ்சி பூண்டு, தேங்காய், கொத்தமல்லி மற்றும் டேன்டேலியன் பொடி (கடைகளில் கேட்டு வாங்கவும்) ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தன்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- இப்போது, மீண்டும் அடுப்பை ஆன் செய்து ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதந்தியதும், வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்ததாக, மிக்ஸியில் அரைத்து வைத்த பேஸ்டை சேர்த்து கிளறவும். இப்போது சுவைக்கு ஏற்ப, 2 ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் குக்கரில் வேகவைத்த மட்டனை எடுத்து, கொதிக்கும் மசாலாவில் சேர்க்கவும். தொடர்ந்து, உங்களுக்கு தேவையான அளவில் தண்ணீர் சேர்த்து 2 முறை கிளறவும்.
- இப்போது மட்டன் மசாலாவுடன் சேர தட்டை கொண்டு மூடி 6 முதல் 7 நிமிடங்கள் கொதிக்கவிட்டால் சுவையான மட்டன் சாம்பார் ரெடி.