காத்துவாக்குல ரெண்டு காதல்.. ஒரே நேரத்தில் இருவருடன் திருமணம்.. வினோத சம்பவம்!

Himachal Pradesh Marriage : இமாச்சல பிரதேசத்தில் இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்கள் கடைபிடிக்கும் பழக்கம் வழக்கங்கள் ஆகும். ஹட்டி என்ற பழங்குடி சமூகத்தில் ஒரு பெண்ணை, இரு ஆண்கள் திருமணம் செய்து கொள்வது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்.. ஒரே நேரத்தில் இருவருடன் திருமணம்.. வினோத சம்பவம்!

ஒரு பெண்ணை திருமணம் செய்த இரண்டு ஆண்கள்

Updated On: 

20 Jul 2025 13:53 PM

இமாச்சல பிரதேசம், ஜூலை 20 : இமாச்சல பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பேரை ஒரு பெண் திருமணம் (Himachal Pradesh Marriage)  செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் (Hatti Community) காலங்காலமாக பின்பற்றி வருவதாக தெரிகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்தியாவில், பல கலாச்சாரங்கள், பாராம்பரியங்கள், பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருமணத்திற்கு ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் தனித்த பழக்க வழக்கங்கள் உண்டு. அந்த வகையில், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் வினோத நடைமுறை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் இமாச்சல பிரதேசத்தில் அரங்கேறி இருக்கிறது.

ஒரே நேரத்தில் 2 பேருடன் திருமணம்

இமாச்சலப் பிரதேசத்தின் ஷில்லை பகுதியில் உள்ள ட்ரான்ஸ் கிரி என்ற கிராமத்தில் வினோத நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு பெண்ணை, அவரது இரண்டு சகோதர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதாவது, சிர்மவுர் மாவட்டத்தைச் சேர்ந்வதர் பெண் சுனிதா. பெண் சுனிதாவை, சகோதரர்கள் பிரதீப், கபில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் 2025 ஜூலை 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெற்றது. இந்த திருமணத்தில் அப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு, மணமக்களை ஆசீர்வதித்தனர்.

Also Read : மின்னல் தாக்கில் 34 பேர் பலி.. ஒரே நாளில் 2 மடங்காக உயர்ந்த எண்ணிக்கை.. பீகாரில் சோகம்

ஷில்லாய் கிராமத்தைச் பிரதீப் அரசுப் பணியில் இருக்கிறார். அதே நேரத்தில் அவரது தம்பி கபில் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இந்த நடைமுறை இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹட்டி இன மக்கள் காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர். அந்த சமூகத்தை மக்கள் ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்களை திருமணம் செய்வது வழக்கமாகும். அப்படியொரு திருமணம் தான் தற்போது அரங்கேறி உள்ளது.

காரணம் என்ன?


இந்த திருமணம் குறித்து பேசிய பிரதீப், “நாங்கள் எப்போதும் வெளிப்படைத்தன்மையை நம்புகிறோம். நாங்கள் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டோம். எந்த அழுத்தமும் இல்லாமல் தனது முடிவை மூன்று பேரும் எடுத்துள்ளோம்” என்றார். ஹட்டி என்பது இமாச்சலப் பிரதேசம்-உத்தரகண்ட் எல்லையில் உள்ள சமூகமாகும். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட்டது.

Also Read : கழுத்தில் பாம்பை போட்டுக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிர்மௌர் மாவட்டத்தின் டிரான்ஸ் கிரி பகுதியில் சுமார் 450 கிராமங்களில் ஹட்டி சமூகத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக பல கணவர் மணம் நடைமுறையில் இருந்தது. இதுபோன்ற திருமணங்கள் அந்த சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சல பிரசேத்தின் நீதிமன்றமே இதற்கு அனுமதி அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.