சாலையில் சென்ற சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய இளைஞர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

Youngsters Set Fire on 15 Years Old Girl | ஒடிசாவில் சாலையில் நடந்துச் சென்றுக்கொண்டு இருந்த 15 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி மூன்று இளைஞர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் சென்ற சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய இளைஞர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Published: 

20 Jul 2025 08:36 AM

புவனேஷவர், ஜூலை : ஒடிசா (Odisha) மாநிலம் புவனேஷ்வரில் (Bhubaneswar) சாலையில் நடந்து சென்றுக்கொண்டு இருந்த 15 வயது சிறுமியை இடை மறித்த இளைஞர்கள் சிலர், அவரின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி சிறுமியை உயிருடம் எரிய வைத்துள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், அது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மூன்று இளைஞர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய இளைஞர்கள்

ஒடிசா மாநிலம், பூரி மாவட்டம் பயபர் கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று தனது தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். சிறுமி அந்த கிராமத்தின் அருகே உள்ள தோட்ட பகுதியில் நடந்து சென்ற போது, அங்கு வந்த மூன்று இளைஞர்கள் சிறுமியை இடை மறித்துள்ளனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணையை சிறுமியின் மீது ஊற்றி அவரை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அதிர்ச்சியடைந்த சிறுமி வலியால் கதறி துடித்துள்ளார்.

இதையும் படிங்க : வரதட்சணை கொடுமை.. கை, கால்களில் எழுதி வைத்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு.. அதிர்ச்சி சம்பவம்!

70% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராமத்தினர், அவரை மீட்டர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கிராமத்தினர் ஓடி வருவதைக் கண்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த நிலையில் சுமார் 70% காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிராம மக்களின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகளான அந்த தப்பியோடிய மூன்று இளைஞர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : கழுத்தில் பாம்பை போட்டுக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டிய நபர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பல கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

சிறுமியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு இளைஞர்கள் தப்பிச் சென்ற நிலையில், அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் உள்ளது. இந்த நிலையில், காதல் விவகாரம் அல்லது முன்பகை காரணமாக இளைஞர்கள் இந்த செயலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.