Telangana New Labor Laws: தொழிலாளர்களின் வேலை நேரம் இனி 10 மணிநேரம்.. தெலுங்கானா அரசு அறிவிப்பு..!

Telangana's 10-Hour Workday Policy: தெலுங்கானா அரசு, தொழிற்சாலைகளில் 10 மணிநேர வேலை நாளை அறிவித்துள்ளது. இது வாரத்திற்கு 48 மணிநேர ஓய்வுடன் கூடியது. கடைகள் மற்றும் மால்கள் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. கூடுதல் நேர வேலைக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்படும். இந்த உத்தரவு ஜூலை 8, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என அரசு நம்புகிறது. ஆனால், ஊழியர்களின் நலன் குறித்தும் விவாதம் நீடிக்கிறது.

Telangana New Labor Laws: தொழிலாளர்களின் வேலை நேரம் இனி 10 மணிநேரம்.. தெலுங்கானா அரசு அறிவிப்பு..!

வேலைநேரம் அதிகரிப்பு

Published: 

06 Jul 2025 16:06 PM

இந்தியாவில் வேலை நேரம் குறித்த விவாதம் நடந்து வரும் நிலையில், தெலுங்கானா அரசு (Telangana Govt) வேலை நேரம் தொடர்பாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளும் 10 மணிநேர வேலை (Telangana New Labor Laws) என்ற திட்டத்தை தெலுங்கானா அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. சிலர் குறைவான நேரங்களே போதுமான நேரம் என்று கூறி வந்தாலும், மற்றவர்கள் உற்பத்தியை அதிகரிக்க அதிக வேலை நேரம் அவசியம் என்று கூறுகின்றனர். வேலை நேரம் அதிகரித்தது தொடர்பாக நேற்று அதாவது 2025 ஜூலை 5ம் தேதி தெலுங்கானா அரசு உத்தரவை பிறப்பித்தாலும், கடைகள் மற்றும் மால்கள் இதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவானது வருகின்ற 2025 ஜூலை 8ம் தேதி முதல் தெலுங்கானா அரசிதழில் வெளியிட்டப்பட்ட பிறகு நடைமுறைக்கு வருகிறது.

10 மணிநேரம் வேலை:

தொழிற்சாலைகளில் ஒருநாளைக்கு 10 மணிநேர வேலை என்ற திட்டத்திற்கு தெலுங்கானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், வாரம் முழுவதும் வேலை செய்தபிறகு, விடுமுறைக்கும் ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ஊழியர்கள் ஒரு வாரத்தில் 48 மணிநேரம் ஓய்வு அளிக்கப்படும். தெலுங்கானா அரசு மாநிலத்தில் வணிகத்தை எளிதாக்கும் நோக்கில் வேலை நேரம் தொடர்பான இந்த உத்தரவை பிறப்பித்தது. இருப்பினும், அரசாங்கத்தின் இந்த உத்தரவு கடைகள் மற்றும் மால்களுக்கு பொருந்தாது.

தொழிற்சாலைகளில் வேலை நேரம் ஒரு நாளைக்கு 10 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும் என்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கூடுதல் நேரத்திற்குப் பிறகும் கூட, ஊழியர்களின் பணிநேரம் 12 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்றும், ஒவ்வொரு நாளும் 6 மணி நேரத்திற்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு ஊழியர்களுக்கு 30 நிமிட இடைவெளி வழங்குவது அவசியம் என்றும் உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

விதிமீறும் நிறுவனங்களுக்கு அபராதம்:


தெலுங்கானா மாநில அரசு வெளியிட்ட இந்த உத்தரவில், ஊழியர்கள் அதிக மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்திருந்தால், அவர்கள் அதிக பிரச்சனையை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

பரிசோதனை திட்டம்:

கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் திருத்த சட்டம் 2023 ஐ நிறைவேற்றியது. இதன் கீழ், தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 12 மணிநேராமாக உயர்த்தியது. இருப்பினும், ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்து 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளும் விருப்பமும் வழங்கப்பட்டது.

4 நாள் வேலை நாட்கள்:

ஜப்பான், பெல்ஜியம், பிரிட்டன் மற்றும் ஐஸ்லாந்து போன்ற சில வளர்ந்த நாடுகள் நான்கு நாள் வேலை வாரத்தை சோதனை செய்து வருகின்றன. இதன்மூலம், இந்த நாடுகளின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இப்படியான விடுமுறை ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி,வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.