Delhi Blast: டெல்லியில் நடந்தது தற்கொலை படை தாக்குதலா? புல்வாமா வரை சென்ற விசாரணை.. கைதான கார் உரிமையாளர் சொன்ன திடுக் தகவல்..
Car Bomb Blast At Redfort: கோட்வாலி காவல் நிலையத்தில் UAPA பிரிவுகள் 16, 18 மற்றும் வெடிபொருள் சட்டம் மற்றும் BNS இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

கோப்பு புகைப்படம்
டெல்லி, நவம்பர் 11,2025: தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிச்சத்தத்தால் நாடு முழுவதும் அதிர்ச்சியடைந்தது. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 க்கு வெளியே ஒரு காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் அருகிலுள்ள வாகனங்கள் உடைந்து தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் பீதி ஏற்பட்டது. இதற்கிடையில், டெல்லி காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA), வெடிபொருட்கள் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:
இருப்பினும், இப்போது பெரிய கேள்வி என்னவென்றால், இந்த குண்டுவெடிப்புக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? இது தற்கொலைத் தாக்குதலா? உண்மையில், காரின் விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், பயங்கரவாதத் தாக்குதல் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும் படிக்க: நாட்டையே உலுக்கிய டெல்லி வெடிகுண்டு விபத்து.. இதுவரை இல்லாத புதிய முறை.. காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் தகவல்..
கோட்வாலி காவல் நிலையத்தில் UAPA பிரிவுகள் 16, 18 மற்றும் வெடிபொருள் சட்டம் மற்றும் BNS இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்ன விளக்கம்:
முன்னதாக, ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 கார் வெடித்துச் சிதறியதாகக் கூறினார். இந்த விவகாரம் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: டெல்லி குண்டுவெடிப்பு கார் ஓனர் இவர்தான்.. விவரங்களை கண்டுபிடித்த போலீஸ்!
குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள், டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. அமித் ஷா, “நான் டெல்லி காவல்துறை அதிகாரி மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் பேசியுள்ளேன். நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம், அவற்றை மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்துவோம்” என்றார்.
கைது செய்யப்பட்ட கார் உரிமையாளர்:
இதற்கிடையில், டெல்லி போலீசார் கார் உரிமையாளர் முகமது சல்மானை கைது செய்து, வாகனம் குறித்து விசாரித்தனர். அப்போது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஓக்லாவில் உள்ள தேவேந்திரா என்ற நபருக்கு காரை விற்றதாக அவர் கூறினார். பின்னர் அந்த கார் அம்பாலாவில் உள்ள ஒருவருக்கும், பின்னர் புல்வாமாவில் உள்ள தாரிக் என்ற நபருக்கும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உச்ச பாதுகாப்பில் டெல்லி:
டெல்லியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, வாகன சோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்திற்குப் பிறகு எரியும் கார்களில் இருந்து தீப்பிழம்புகள் எழுந்ததால் அந்தப் பகுதியே பீதியடைந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடே பதற்றத்தில் உரைந்துள்ளது.