புதின் இந்திய வருகை…. கமாண்டோ, ஸ்னைப்பர், டிரோன் மற்றும் ஏஐ – 5 அடுக்கு பாதுகாப்பு

Vladimir Putin : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பெயரில் இந்தியா வருகிறார்.  இதனையடுத்து டெல்லியில் கமாண்டோ படைகள், ஸ்னைப்பர்கள், ஏஐ கண்காணிப்பு, ட்ரோன்கள், ஜாமர்கள் உள்ளிட்ட 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

புதின் இந்திய வருகை.... கமாண்டோ, ஸ்னைப்பர், டிரோன் மற்றும் ஏஐ - 5 அடுக்கு பாதுகாப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - நரேந்திர மோடி

Updated On: 

03 Dec 2025 22:05 PM

 IST

புதுடில்லி, டிசம்பர் 3: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) இந்திய வருகையை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கமாண்டோ படைகள், ஸ்னைப்பர்கள், ஏஐ கண்காணிப்பு, ட்ரோன்கள், ஜாமர்கள் உள்ளிட்ட 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) வழங்கிய அழைப்பின் பேரில் இந்தியா–ரஷ்ய ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் 4, 2025 அன்று ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பெயரில் இந்தியா வருகிறார்.  இதனை முன்னிட்டு டிசம்பர் 4, 2025 அன்று டெல்லி வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் இரவு விருந்தில் கநல்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 5, 2025 அன்று ராஷ்டிரிய பவனில் அவருக்கு அரசியல் மரியாதை அளிக்கப்படவிருக்கிறது. பின்னர் ராஜ் பவனில் உள்ள காந்தி நினைவிடம் செல்லும் அவர் ஹைதராபாத் ஹவுஸ்ஸில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் விருந்தில் கலந்துகொள்கிறார்.

இதையும் படிக்க : “எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டுமென ஆலோசனை வழங்க தயார்”.. பிரதமர் மோடி பரபர பேச்சு!!

ரஷ்யா சிறப்பு பாதுகாப்பு குழு முன்கூட்டியே இந்தியா வருகை

ரஷ்ய அதிபர் புதினின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க, அவரது பாதுகாப்பு படையை சார்ந்த 40க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் முன்கூட்டியே டெல்லி வந்துள்ளனர். அவர்கள் டெல்லி காவல்துறை, தேசிய பாதுகாப்பு படை, ஆகியோருடன் புதின் பயணிக்கும் அனைத்து வழித்தடங்களையும் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சாதனங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக உயர் தர டிரோன்கள், புதினின் வாகனத்தை ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கவிருக்கிறது. மேலும் ஸ்னைப்பர்கள் அனைத்து முக்கிய திசைகளிலும் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளன. மேலும் அதிக திறன் கொண்ட ஜாமர்கள் சிக்னல் தடுப்பிற்கும் பயன்படுத்தப்படவிருக்கின்றன. மேலும் ஏஐ உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவிருக்கின்றன. மேலும் முகம் கண்டறியும் கேமராக்களும் பயன்படுத்தப்படவிருக்கின்றன.  அனைத்து தகவல்களும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை மூலமாக நேரடியாக கண்காணிக்கப்படும்.

இதையும் படிக்க : தமிழ் இந்தியாவின் பெருமிதம்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!

இந்தியப் பயணத்தில் புதின் பயன்படுத்தும் Aurus Senat Armoured Limousine என்ற வாகனம், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அதிபரின் அதிகாரப்பூர்வ வாகனம் பயன்படுத்தப்படுத்தப்படவுள்ளது.  இந்த வாகனம் துப்பாக்கி குண்டுகள், வெடிகுண்டுகள், இரசாயன தாக்குதல் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.  இந்த வாகனத்தை ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புடின் தங்கி இருக்கும் ஹோட்டல் தற்போது முழுமையாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் தங்கியிருக்கும் அறைகள், லாபி, மீட்டிங் ரூம் ஆகியவை முழுமையாக பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதனை ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனர்.

இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது.. எலான் மஸ்க் ஓபன் டாக்..
ஹார்திக் பாண்டியாவுக்கு நிச்சயதார்த்தமா? வைரலாகும் வீடியோ..
ரேபிடோ ஓட்டுநரின் கணக்கில் ரூ.331. 36 கோடி.. அமலாக்கத்துறை விசாரணை
கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் பீட்சா மற்றும் பானி பூரி