இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.. என்ன பேசப்போகிறார்?
PM Modi Address To Nation : பிரதமர் மோடி 2025 செப்டம்பர் 21ஆம் தேதியான இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை (செப்டம்பர் 22) அமலாக உள்ள நிலையில், அதுகுறித்தும, அமெரிக்காவின் வரி விதிப்பு, எச்-1 விசா குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி
டெல்லி, செப்டம்பர் 21 : பிரதமர் மோடி 2025 செப்டம்பர் 21ஆம் தேதியான இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். பிரதமர் மோடி (PM Modi) என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 21) மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து, நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது முக்கிய அறிவிப்புகளை அவர் அறிவித்து வருகிறார். 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். 2019ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி அன்று பாலகோட் வான்வழி நடத்தியதாக அறிவித்தார்.
மேலும், 2020ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கொரோனா தொற்று காலத்திலும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் 2020 ஏப்ரல் 14ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அறிவித்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி கடைசியாக 2025 மே 12ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். இப்படியாக பிரதமர் மோடியின் உரைகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
Also Read : ரூ. 34,200 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகள்.. குஜராத்தில் பிரதமர் மோடியின் திட்டம் என்ன?
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரை
PM Modi to address nation at 5 pm today
Read @ANI Story |https://t.co/bjKPWxDHAR #PMModi #address #India pic.twitter.com/7CGFkIg87E
— ANI Digital (@ani_digital) September 21, 2025
இந்த நிலையில், 2025 செப்டம்பர் 21ஆம் தேதியான இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். ஜிஎஸ்டி சீர்திருத்தம் 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 21) மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் பெரிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவில் நடைமுறையில் இருந்த 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை வெறும் 2 அடுக்குகளாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்த வரி திருத்த முறை 2025 செப்டம்பர் 22ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது. இந்த வரி விதிப்பால் பல பொருட்களில் விலைகள் குறையக் கூடும். எனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார். மேலும், எச்-1பி விசா தொடர்பாகவும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.