PM Modi’s Speech: பாரத் மாதா கி ஜெய் என்றதும் எதிரிகள் நிலைகுலைந்து போனார்கள் – பிரதமர் மோடி
PM Modi Visit Adampur Airbase: பாரத் மாதா கி ஜே என்று சொன்னப்போது எதிரிகள் நிலைகுலைந்து போனார்கள். விமானப் படை வீரர்கள் இந்தியாவை பெருமை அடைய செய்து வரலாறு படைத்துள்ளனர் என்று ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பஞ்சாப், மே 13: ஆபரேஷன் சிந்தூரின் (Operation Sindoor) மகத்தான வெற்றிக்குப் பிறகு , பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) இன்று அதாவது 2025 மே 13ம் தேதி திடீரென பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு (Adampur Airbase) சென்று இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்களைச் சந்தித்தார். அதன்பிறகு பேசிய அவர், “ பாரத் மாதா கி ஜெய் சக்தியை உலகம் இப்போதுதான் கண்டுள்ளது. நாட்டிற்காக வாழ விரும்பும், நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்பும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரல் இது. பாரத் மாதா கி ஜெய் என்று சொன்னப்போது எதிரிகள் நிலைகுலைந்து போனார்கள். விமானப் படை வீரர்கள் இந்தியாவை பெருமை அடைய செய்து வரலாறு படைத்துள்ளனர். பாரத் மாதா கி ஜெய் என்பது ஒவ்வொரு குடிமகனின் குரலாகும். பாரத் மாதா கி ஜெய் களத்திலும், பணியிலும் எதிரொலிக்கிறது.
இந்தியா முழுவதும் இன்று ஒவ்விரு மூலையிலும் ஆபரேஷன் சிந்தூர் ஒலிக்கிறது. இந்த ஆபரேஷனின்போது, ஒவ்வொரு இந்தியரும் உங்களுடன் துணை நின்றனர். ஆபரேஷன் சிந்தூர் ஒரு சாதாரண இராணுவ ஆபரேஷன் அல்ல. இது இந்தியாவின் கொள்கை, நோக்கங்கள் மற்றும் தீர்க்கமான தன்மையின் சங்கமம்.” என்று பேசி வருகிறார்.
இந்தியாவை கண் உயர்த்தி பார்த்தால் அழிவுதான்:
#WATCH | At the Adampur Air Base, PM Narendra Modi says “…Aatank ke aakao ko samajh aa gaya hai ki Bharat ki ore nazar uthane ka ek hi anjaam hoga- tabaahi aur mahavinaash…”
He says “You attacked them from the front and killed them. You destroyed all the big bases of… pic.twitter.com/B19UVZrY4f
— ANI (@ANI) May 13, 2025
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நம் சகோதரிகளின் குங்குமம் அழிக்கப்பட்டபோது, நாம் பயங்கரவாதிகளை நசுக்க வேண்டியிருந்தது. பயங்கரவாதத்தின் அனைத்து பெரிய தளங்களையும் நீங்கள் அழித்துவிட்டீர்கள். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழிக்கப்பட்டன. இதில், 100க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவை நோக்கி கண்களை உயர்த்துவபவர்களுக்கு ஒரே ஒரு முடிவு மட்டுமே இருக்கும் என்பதை பயங்கரவாதிகளும், அவர்களை ஆதரிப்பவர்களும் புரிந்து கொண்டனர். அது அழிவுதான்.
நமது ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் பற்றி நினைத்து பாகிஸ்தானால் பல நாட்கள் தூங்க முடியாது. நமது ராணுவம் பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளது. பயங்கரவாதிகளை அவர்களின் வீடுகளுக்குள் வைத்து நாம் அழித்துள்ளோம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தையே சார்ந்துள்ளது. சிந்தூர் ஆபரேஷனால் விரக்தியடைந்த எதிரி, இந்த விமானப்படை தளத்தையும், நமது பல விமானப்படை தளங்களையும் பலமுறை தாக்க முயன்றனர். ஆனால் பாகிஸ்தானின் தீய நோக்கங்கள் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தன. பாகிஸ்தானின் ட்ரோன்கள், UAVகள், விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தும் நமது வலுவான வான் பாதுகாப்பின் முன் அழிக்கப்பட்டன.”என்றார்.