India – Pakistan Ceasefire : இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் திரும்பிய அமைதி.. இந்திய ராணுவம் தகவல்!
Peace Returns After in India - Pakistan Border | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தன. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் எல்லை இன்று ( மே 11, 2025) அமைதியுடன் காணப்படுகிறது.

ஜம்மு மற்று காஷ்மீர், மே 11 : இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் (Ceasefire) அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. நேற்று ( மே 10, 2025) வரை, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பெரிய போர் வெடிப்பதற்கான சூழல் நிலவிய நிலையில், தற்போது பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீண்டும் அமைதி திரும்பியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அதற்கு காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை (Operation Sindoor) கையில் எடுத்த இந்திய அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த இந்தியா
🚨 OFFICIAL CONFIRMATION BY INDIA 🚨
India & Pakistan has agreed to CEASEFIRE!
pic.twitter.com/wsJYrQVYuS— The Khel India (@TheKhelIndia) May 10, 2025
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் நிலவி வந்த நிலையில், தீவிர போராக உருவெடுக்கும் அச்சம் நிலவி வந்தது. ஆனால், நேற்று (மே 10, 2025) இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக இரு நாடுகளும் ராணுவ தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் திரும்பிய அமைதி
#WATCH | J&K | Situation seems normal in Jammu city. No drones, firing or shelling was reported during the night.
pic.twitter.com/yUipC1DkGt#IndiaPakistanWar #IndianArmy #IndiaPakistanWar2025 #Pakistan #jammu #DroneAttack #ceasefire— Col Sofiya Qureshi (@Colsofiaquershi) May 11, 2025
நேற்று ( மே 10, 2025) மாலை இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில், ஒருசில மணி நேரங்களிலேயே பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரில் 11-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்த இந்தியா, மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தான் இரவு 10.30 மணி முதல் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீங்கி அமைதி நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.