சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. 120 எம்.பி.க்கள் கையெழுத்து..

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுவதற்கு 273 லோக்சபா உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் கட்டுரை 94(c) மற்றும் லோக்சபா நடைமுறை விதிகளின் விதி 200 ஆகியவற்றின் படி இந்த நம்பிக்கையில்லா நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற, லோக்சபா உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆதரவு வழங்க வேண்டும்

சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. 120 எம்.பி.க்கள் கையெழுத்து..

கோப்பு புகைப்படம்

Updated On: 

10 Feb 2026 15:57 PM

 IST

டெல்லி, பிப்ரவரி 10, 2026: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதற்காக, சபாநாயகரை பதவியிலிருந்து நீக்கக் கோரி லோக்சபா செயலாளர் நாயகத்திற்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் கட்டுரை 94(c)ன் கீழ் சபாநாயகருக்கு எதிராக அவநம்பிக்கை தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, ஆளும் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து இடையூறு செய்துவருவதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். பாஜக உறுப்பினர்கள் அவையில் அவதூறான வார்த்தைகள் பேசினாலும், அவர்களின் மைக்குகள் அணைக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆய்வு செய்ய கோரிக்கை:

இதனிடையே, எதிர்க்கட்சிகள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசுகளை ஆய்வு செய்யுமாறு லோக்சபா செயலாளரகத்திற்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மறுபுறம், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இன்னும் தெளிவற்ற நிலை நீடித்து வருகிறது.

மேலும் படிக்க: எஸ்ஐஆர் பணிகள் தாமதமாகக் கூடாது – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சபாநாயகருக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்; அதன் பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு எடுக்கலாம் என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார். மேலும், சபாநாயகரிடம் தங்களின் கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி கடிதம் எழுத வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

அதே நேரத்தில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறுவதற்கு 273 லோக்சபா உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் கட்டுரை 94(c) மற்றும் லோக்சபா நடைமுறை விதிகளின் விதி 200 ஆகியவற்றின் படி இந்த நம்பிக்கையில்லா நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற, லோக்சபா உறுப்பினர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆதரவு வழங்க வேண்டும்.

மேலும் படிக்க: 3 திருமணம், 5 குழந்தைகள், ரூ.2 கோடி கடன்.. மூன்று சகோதரிகள் தற்கொலை வழக்கில் வெளியான முக்கிய தகவல்கள்!

நோட்டீஸ் கிடைத்த பின்னர், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதிக்கும் தீர்மானம் ‘லிஸ்ட் ஆஃப் பிஸினஸ்’ பட்டியலில் சேர்க்கப்படும். நோட்டீஸ் பெற்ற நாளிலிருந்து குறைந்தது 14 நாட்களுக்குப் பின்னரே இந்த நடைமுறை தொடங்கும். சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை தீர்மான விவாதத்தின் போது, துணை சபாநாயகர் அவையின் தலைமை பொறுப்பை ஏற்குவார். இந்த விவாதத்தில் சபாநாயகருக்கு பேசும் உரிமை உள்ளது. அதேபோல், அவநம்பிக்கை தீர்மானத்தில் வாக்கெடுக்கும் உரிமையும் சபாநாயகருக்கு உண்டு.

லாட்டரியில் ரூ.49 கோடி ஜாக்பாட்… நண்பருடன் பரிசுத் தொகையைப் பகிர முடிவு செய்த கர்நாடக இளைஞர்
வாரத்தின் முதல் நாளே கடுமையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
யூடியூபின் Auto-Dubbing.. இனி கூடுதல் சிறப்புடன் பயனர்களுக்கு வழங்கப்படும்..
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..