தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம்.. பெண்களை புதைத்தாக புகார் அளித்தவர் கைது.. ஷாக் பின்னணி!

Dharmasthala Case : கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெண்களை கொன்று புதைத்ததாக புகார் அளித்த நபரையே போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பொய்ப்புகார் அளித்தது தெரியவந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம்.. பெண்களை புதைத்தாக புகார் அளித்தவர் கைது.. ஷாக் பின்னணி!

தர்மஸ்தலா வழக்கு - கைதான நபர்

Updated On: 

23 Aug 2025 13:22 PM

கர்நாடகா, ஆகஸ்ட் 23 :  கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோயில் (Dharmasthala Case) அருகே பெண்களை கொலை செய்து புதைத்ததாக பொய்ப் புகார் அளித்து பரபரப்பை கிளப்பிய நபரையே போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு தொடர்ந்து விசாரித்து வருகிறது.  கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில். இந்த கோயில் கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் அமைந்துள்ளது. இந்த கோயில் அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமானது. மேலும், வெளியூர்களில் இருந்து இந்த கோயிலுக்கு மக்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இந்த கோயிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர்கள் பெண்களை கொன்று புதைத்ததாக அவர் புகார் அளித்தது. இந்த புகார் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

மேலும், கர்நாடக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாஜக, காங்கிரஸை கடுமையாக சாடி வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை  நடத்தி வருகிறது. அதாவது, 70 முதல் 80 பெண்களின் உடல்களை புதைத்ததாகவும், 1998 மற்றும் 2014ஆம் ஆண்டுக்கு இடையில் சிறார்கள், பெண்கள் என புதைத்தாகவும் அவர் புகாரில் கூறியிருநந்தார். பெண்களை உடல்களை 15 முதல் 20 இடங்களில் புதைத்ததாகவும் அவர் புகார் அளித்திருந்தார்அவர்களில் சிலருக்கு பாலியல் வன்கொடுமைக்கான அடையாளங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார். இதனை புகாதாரர் நீதிமன்றத்தில் வாக்குமூலமாகவும் அளித்தார்.

Also Read : 10ஆம் வகுப்பு மாணவனை கொன்ற 8ம் வகுப்பு மாணவன்.. சிக்க வைத்த ஸ்க்ரீன்ஷாட்!

பெண்களை புதைத்தாக புகார் அளித்தவர் கைது

இதனை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, தர்மஸ்தல வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பெண்களின் உடல்களை புதைத்த இடங்களையும் புகார்தாரர் போலீசாருக்கு  காண்பிடித்தார். ஆனால், அங்கு அவர் சொன்னபடி பெரிய அளவில் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக  சடலங்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  ஒரு இடத்தில் மட்டுமே சிதைந்த எலும்புக் கூடு ஒன்று கிடைத்தது.

இதனால், புகார்தாரர் மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இந்த விசாரணை இரவு முழுவதும் நடந்த நிலையில், அவர் பொய்ப்புகார் அளித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளை அவரை கைது செய்தனர்.  கைதானவர் 50 வயது தூய்மை பணியாளர் சின்னய்யா என தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Also Read : கிரைம் திரில்லர் வெப் சீரீஸ் பார்த்து ஸ்கெட்ச்.. ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி!

சமீபத்தில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா புகார்தாரரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்தால், அவர் மீது சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது, அவர் பொய்ப்புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில், தர்மஸ்தலா வழக்கில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.