ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை.. பட்டப்பகலில் துணிகரம்.. மைசூரில் பரபரப்பு!!

Gunmen Rob at Jewellery Shop: அந்த சமயத்தில் மேலாளர் அஸ்கர் கொள்ளையர்களை தடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்களில் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில், மேலாளர் அஸ்கரின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார்.

ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் கொள்ளை.. பட்டப்பகலில் துணிகரம்.. மைசூரில் பரபரப்பு!!

நகைக்கடையில் கொள்ளை

Updated On: 

29 Dec 2025 09:29 AM

 IST

கர்நாடாகா மைசூரில் பகல் நேரத்தில் நகைக்கடைக்குள் புகுந்த கும்பல், மேலாளரை துப்பாக்கியால் சுட்டு ரூ.5 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மொத்ததில் இந்த கொள்ளை சம்பவம் நான்கே நிமிடத்தில் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது. அந்த நகைக்கடையில் 20 முதல் 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்த நிலையில் இந்த துணிகரம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பாலியல் சீண்டல்.. அராஜகத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள்!

பட்டப்பகலில் துப்பாக்கியுடன் வந்த கொள்ளையர்கள்:

மைசூரு மாவட்டம் உஞ்சூர் தாலுகா பேருந்து நிலையம் அருகே பிரபல நகைக்கடை ஒன்றில் மேலாளராக அஸ்கர் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் வழக்கம்போல் வியாபாரம் நடைபெற்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் முகமூடி அணிந்த 5 பேர் கும்பல், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்து, துப்பாக்கியுடன் கடைக்குள் புகுந்தனர். துப்பாக்கியை காட்டி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தினர்.

மேலாளர் மீது துப்பாக்கிச்சூடு:

அந்த சமயத்தில் மேலாளர் அஸ்கர் கொள்ளையர்களை தடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த கொள்ளையர்களில் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில், மேலாளர் அஸ்கரின் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார். பின்னர் அந்த கொள்ளை கும்பல் தாங்கள் கொண்டு வந்த பையில் கடையில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளி எடுத்துக்கொண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களிலேயள தப்பி ஓடினர்.

இதையும் படிங்க : அரசுப் பள்ளிகளில் தினமும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்.. அதிரடி உத்தரவு எங்கு தெரியுமா?

ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை:

உடனே அங்கு இருந்த மக்கள் காயமடைந்த மேலாளரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினார். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில், கொள்ளையர்கள் நகைக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்ததும், ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொண்டு தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கும்பலில் ஒருவர் தனது ஹெல்மெட்டை கடைக்குள் மறந்து விட்டுச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கர்நாடக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!