PM Modi’s Nation Address: பஹல்காம் தாக்குதல் முதல் போர் நிறுத்தம் வரை.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை!
India-Pakistan War Ends: 2025 மே 10 அன்று இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அடைந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்துரை மேற்கொண்டது. போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி நாட்டு மக்களை உரையாற்ற உள்ளார். இதில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துர் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி, மே 12: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான (India – Pakistan Tensions) சண்டையானது கடந்த 2025 மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்திற்கு பிறகு, இந்திய ராணுவத்தின் முப்படைகளின் தளபதிகளும் கடந்த 3 நாட்களாக செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்திற்கு பிறகு பிரதமர் மோடி (PM Modi) முதல் முறையாக 2025 மே 12ம் தேதியான இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுடன் உரையாற்ற இருக்கிறார். இதில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) மற்றும் கடந்த ஒரு வாரத்தில் நடந்த விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல் முதல் போர் நிறுத்தம் வரை:
Prime Minister Narendra Modi will address the nation at around 8 PM today. pic.twitter.com/NobQiY66Nh
— ANI (@ANI) May 12, 2025
முன்னதாக, கடந்த 2025 ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எண்ணிய மத்திய அரசாங்கம், இந்திய இராணுவத்தின் மூலம் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாதிகள் முகாம் அளிக்கப்பட்டது. இதில், 100க்கும் அதிகமாக பயங்கரவாதிகள் அளிக்கப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்தது.
நாட்டு மக்களிடையே உரையாற்றும் பிரதமர் மோடி
கடந்த 2025 மே 7ம் தேதி இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்களும், 2 பிஎஸ்எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 60 பேர் காயமடைந்தனர். இதுதவிர, 27 பொதுமக்கள் உயிரும் பறிப்போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து விஷயங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 12, 2025) நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்:
முன்னதாக, கடந்த 2025 மே 10ம் தேதி இரவு 11.30 மணிக்கு பாகிஸ்தான் மக்களிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் உரையாற்றினார். இதில், இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் இராணுவத்தின் ‘பன்யன்-அன்-மர்சூஸ்’ ஆபரேஷன் வெற்றி பெற்றதாக கூறினார். அப்போது முதல் பாகிஸ்தானில் ‘யாம்-இ-தஷக்கூர்’ கொண்டாடப்படுகிறது. ‘யாம்-இ-தஷக்கூர்’ என்பது உருது வார்த்தையில் நன்றி தெரிவிக்கும் நாள் என்று கூறப்படுகிறது.
3 மணிநேரத்தில் ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2025 மே 10ம் தேதி மாலை 5 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்து 3 மணிநேரத்திற்கு பிறகு, பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் வான்வழி மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 15 இடங்களில் பாகிஸ்தான் ஆளில்லா விமான தாக்குதலை நடத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்திய விமான பாதுகாப்பு படையினரால் அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டன.