வேற லெவல்.. எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி.. எந்த ரூட்ல தெரியுமா?
India first ATM On Train: விரைவு ரயிலில் ஏடிஎம் சேவையை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. மும்பையின் பஞ்சவதி எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏடிஎம் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ஏடிஎம் ஞ்சவதி எக்ஸ்பிரஸில் ரயிலின் ஏசி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் ரயிலில் பயணிக்கும்போதே பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். இதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

ரயிலில் ஏடிஎம் சேவை
மும்பை, ஏப்ரல் 17: இந்தியாவில் முதல்முறையாக ரயிலில் ஏடிஎம் சேவையை இந்திய ரயில்வே (ATM On Express Train)அறிமுகப்படுத்தி உள்ளது. நாசிக் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் ரயில் ஒன்றில் ஏடிஎம் சேவை தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள், ரயிலில் பயணித்துக் கொண்டே தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும். இதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இந்த புதிய நடைமுறைக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இந்தியாவில் ரயில் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் வசதி
ரயில் சேவையை தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தொலைதூரம் பயணிக்கும் நடுத்தர மக்களின் விருப்பமாக ரயில் சேவை உள்ளது. குறைந்த கட்டணம், படுக்கை வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
பயணிகளுக்கு சிறப்பான பயணத்தை வழங்க ரயில்களை மத்திய நவீனப்படுத்தி வருகிறது. இதற்காக பல விதமான ரயில்கள் அறிமுகப்படுத்துகிறது. வந்தே பாரத் என அதீ வேக ரயில்களையும் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறறது. இந்த நிலையில், ரயில்களில் ஏடிஎம் வசதியை கொண்டு வந்துள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி நடந்துள்ளது. மும்பை-மன்மத் பஞ்சவதி எக்ஸ்பிரஸில் ரயிலில் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டது. பஞ்சவதி எக்ஸ்பிரஸ் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) மற்றும் நாசிக்கில் உள்ள மன்மத் சந்திப்பு இடையே தினமும் இயக்கப்பட்டு வருகிறது.
எந்த ரூட்ல தெரியுமா?
In a first, ATM facility in train. pic.twitter.com/onTHy8lxkd
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 16, 2025
இந்த ரயிலில் தற்போது ஏடிஎம் சேவை தொடங்கப்பட உள்ளது. ரயிலின் ஏசி பெட்டியில் ஏடிஎம் வைக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது பணம் தேவைப்படும் பயணிகளுக்கு ரயிலில் பயணிக்கும் போதே எடுத்துக் கொள்ள முடியும். பணம் மட்டுமில்லாமல், வங்கி கணக்கு அறிக்கைகளையும் இந்த ஏடிஎம் மூலம் பெற முடியும். இது பயணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான சோதனை ஓட்டம் நடந்து முடிந்துள்ளது. விரையில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஏடிஎம்மில் ஒரு ஷட்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பயணிகள் மத்தியில் இந்த சேவை வரவேற்பு பெற்றால், மேலும் பல ரயில்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படலாம் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.