ஆப்ரேஷன் சிந்தூர்.. எப்படி நடத்தப்பட்டது? போருக்கான அறிகுறியா இது?
Operation Sindoor: பஹல்காமில் ஏப்ரல் 22, 2025 அன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர்: 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிவவி வருகிறது. இதில் ஒரு பகுதியாக எல்லைகள் மூடப்பட்டு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதற்கு தக்க பதிலடி இந்திய ராணுவம் தரப்பில் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு தகவல்:
भारतीय सेना ने पाकिस्तान के आतंकी ठिकानों पर मिसाइल हमला किया।#OperationSindoor के तहत पाकिस्तान में 8 आतंकी ठिकाने पूरी तरह तबाह!
पहलगाम का न्याय हुआ… भारत माता की जय! 🇮🇳 pic.twitter.com/bzd6bu7IWd
— Ajit Doval ᴾᵃʳᵒᵈʸ🇮🇳 (@IAjitDoval_IND) May 7, 2025
ஆப்ரேஷன் சிந்துர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் பொது மக்கள் இருப்பிடம் அல்லது பாகிஸ்தான் ராணுவம் இல்லாமல் தீவிரவாத தலைவர்கள் இருப்பிடம் மட்டுமே தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்குள்ளேயே இந்திய அரசாங்கம் முழு வீச்சில் செயல்பட்டு சர்வதேச கூட்டாளிகளை அணுகி அது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பல நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இது தொடர்பான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
ஏப்ரல் 22ஆம் தேதி 2025 பஹல்காமில், பட்ட பகலில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி பாதுகாப்பு துறையிடம் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தது இதற்கெல்லாம் சேர்த்து தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது ஆப்ரேஷன் சிந்துர் என்ற பெயரில் இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகள் அதாவது இந்திய விமானப்படை, இந்திய கடற்படை மற்றும் காலாற்படை மூன்று பிரிவினும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் விமானங்கள் சேதம் அடையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம் என்னவென்றால் முக்கிய பயங்கரவாத தலைவர்கள் இருப்பிடத்தை தாக்குவதே ஆகும். இந்தியாவில் இருக்கக்கூடிய RAW அதிகாரிகள் இது தொடர்பாக 9 இடங்கள் தேர்வு செய்து கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சுமார் 15 கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும், பிரதமர் மோடி இந்த தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இது தொடர்பாக காலை 10 மணிக்கு விரிவாக பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் ராணுவ இலக்குகளோ அல்லது பொதுமக்கள் இருப்பிடமோ எதுவும் தாக்கப்படவில்லை என்றும் தீவிரவாத தலைவர்கள் இருப்பிடம் மட்டுமே தகர்க்கப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அறிவிப்பு:
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
The treacherous enemy has launched a cowardly attack on five locations within Pakistan. This heinous act of aggression will not go unpunished.
Pakistan reserves the absolute right to respond decisively to this unprovoked Indian attack — a…— Shehbaz Sharif (@CMShehbaz) May 6, 2025
இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் லாகூர், சியால்கோட் உள்ளிட்ட விமான நிலையங்கள் அடுத்து 48 மணி நேரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் அவரது எக்ஸ் பக்கத்தின் பதிவில், “ பாகிஸ்தானுக்குள் ஐந்து இடங்களில் எதிரிகள் ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்திய உள்ளது. இந்த கொடூரமான ஆக்கிரமிப்பு செயல் கண்டிப்பாக தண்டிக்கப்படும். இந்தியாவின் இந்த முன் அறிவிப்பு இல்லாத தாக்குதலுக்கு பதில் அளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது. ஏற்கனவே இதற்கான பதிலடி நடவடிக்கைகள் நடந்து வருகிறது.
முழு நாடும் பாகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு பின்னால் ஒன்றுபட்டு நிற்கிறது. மேலும் மன உறுதியும் அசைக்கப்படாமல் உள்ளது ” என தெரிவித்துள்ளார். அதாவது இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.