துணை ஜனாதிபதி தேர்தல்.. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்.. உடனிருந்த ராகுல் காந்தி!

Vice President Election : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக நாடாளுமன்ற செயலாளரிடம் சுதர்சன் வெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

துணை ஜனாதிபதி தேர்தல்.. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்.. உடனிருந்த ராகுல் காந்தி!

சுதர்சன் ரெட்டி

Updated On: 

21 Aug 2025 12:27 PM

 IST

டெல்லி, ஆகஸ்ட் 21 :  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் (Vice President Election) இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி (Sudarsan Reddy) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக நாடாளுமன்ற செயலாளரிடம் சுதர்சன் வெட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கதலின்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சரத் பவார் , பிரியங்கா காந்தி, திருச்சி சிவா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.   குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் 2025 ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். உடல்நலக் காரணங்களால் அவர் ராஜினாமா செய்ததாக அறிவித்தார். இதனை தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, ஆளும் என்டிஏ மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டனர். அதன்படி, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்ரா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில், எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

Also Read : துணை ஜனாதிபதி தேர்தல்.. சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்.. உடனிருந்த பிரதமர் மோடி!

சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்


இதற்கான வேட்புமனு தாக்கல் 2025 ஆகஸ்ட் 22ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். இந்த நிலையில் தான், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அப்போது, ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, திருச்சி சிவா எம்பி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். முன்னதாக, 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதியான நேற்று என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். 

Also Read : பிரதமர், முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாக்கள்.. நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் எதிர்க்கட்சியினர்..

துணை குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்?

துணை ஜனாதிபதி தேர்தலில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெறும். 2025 செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளது. எனவே, ஆளும் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..