நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மணமகன் கைது.. 6 வயது சிறுமி பரிதாப பலி!

Rajasthan Groom Arrested In His Engagement Ceremony | ராஜஸ்தானில் ராகுல் என்ற இளைஞருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில், நவம்பர் 22, 2025 அன்று அவருக்கு நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. அப்போது அவர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், 6 வயது சிறுமி பலியானார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மணமகன் கைது.. 6 வயது சிறுமி பரிதாப பலி!

கைது செய்யப்பட்ட மணமகன்

Updated On: 

25 Nov 2025 10:14 AM

 IST

ஜெய்ப்பூர், நவம்பர் 25 : ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம், கைர்தல் திஜாரா மாவட்டம், ஜெசாய் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல் என்ற இளைஞர். இவருக்கு நவம்பர் 23, 2025 அன்று திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான நவம்பர் 22, 2025 அன்று இவருக்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது மணமகன் ராகுல் தனது நண்பர்களுடன் இணைந்து உற்சாகமாக மேடையில் நடனமாடினார்.

நிச்சயதார்த்த கொண்டாட்டம் – வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மணமகன்

மதுபோதையில் நண்பர்களுடன் நணமாடிக்கொண்டு இருந்த மணமகன், தான் சட்டவிரோதமாக வாங்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி சுட்டுள்ளார். அப்போது அந்த துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு நிச்சயதார்த்த விழாவுக்கு வந்திருந்த ராகுலின் நண்பன் சத்பால் மீனாவின் மகள் வீனா என்ற 6 வயது சிறுமி மீது பாய்ந்துள்ளது. இதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதையும் படிங்க : பாட்டியை அடித்தே கொலை செய்த பேரன்.. அதிர்ச்சி சம்பவம்!

சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

சிறுமி துப்பாக்கி குண்டு பட்டு படுகாயமடைந்ததை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : திடீரென பெப்பர் ஸ்பிரே தாக்குதல்.. டெல்லி காற்று மாசு போராட்டத்தில் ஷாக்கான போலீசார்

மணமகனை அதிரடியாக கைது செய்த போலீசார்

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் மணமகன் ராகுலை கைது செய்தனர். இதன் காரணமாக ராகுலின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. நிச்சயதார்த்த விழாவில் ராகுலுடன் சேர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அவரது நண்பர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராகுலின் நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ராஜஸ்தானில் திருமண நிகழ்ச்சிகளின் போது வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தும் பழக்கம் உள்ளது. இது சட்டவிரோத செயல் என்றாலும் பலரும் இதனை செய்து வருகின்றனர். அந்த வகையில், துப்பாகிச்சூடு நடத்திய மணமகன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..