பாட்டியை அடித்தே கொலை செய்த பேரன்.. அதிர்ச்சி சம்பவம்!

Grandson Kills Grandmother in Maharashtra's Beed | மகாராஷ்டிராவில் தனது பாட்டியை அவரது பேரன் மிக கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டியை அடித்தே கொலை செய்த பேரன்.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Nov 2025 08:29 AM

 IST

மும்பை, நவம்பர் 24 : மராட்டிய மாநிலம், பீட் மாவட்டம், அப்ஜொகி பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் என்ற 28 வயது இளைஞர். இவருக்கு பஞ்புலா ராம்கிஷன் என்ற 68 வயது பாட்டி இருந்துள்ளார். இவர்கள் ஒருவரும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். ராமதாஸ் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தனது பாட்டியை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

68 வயது பாட்டியை அடித்தே கொலை செய்த பேரன்

ராமதாஸ் கடந்த சில மாதங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில், நவம்பர் 15, 2025 அன்று வீட்டில் இருந்த பாட்டி ராம்கிஷனை, ராமதாஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளார். அதன் காரணமாக அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார். ராமதாஸ் அடித்ததால் படுகாயமடைந்து கிடந்த பெண்ணை கண்ட அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral video: ஓடும் ரயிலில் மின்சார கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்.. பாயும் நடவடிக்கை!!

சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக பலியான பெண்

அந்த பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நவம்பர் 22, 2025 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : தேஜஸ் விபத்தில் பலியான விங் கமாண்டர்.. சோகத்தில் மூழ்கிய அவரது சொந்த கிராமம்!

விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை

இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணின் பேரன் ராமதாஸை கைது செய்த போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், பாட்டியை பேரன் அடித்தே கொலை செய்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?
திரிஷ்யம் 3 படம் இப்படி தான் இருக்கும்.. மனம் திறந்த ஜித்து ஜோசப்..
15,000 கி.மீ பயணித்த மாரிச் கழுகு
திறமையான வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவை... டிரம்ப்பின் முரணான பேச்சால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி