டெல்லியில் மீண்டும் லேசான நிலநடுக்கம்.. பதறிய மக்கள்.. என்னாச்சு?

Delhi Earthquake : தலைநகர் டெல்லியில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறை டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடைய பீதியை கிளப்பி உள்ளது. 2025 ஜூலை 11ஆம் தேதியான இன்று ஹரியானாவில் 3.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம், டெல்லியில் உணரப்பட்டது.

டெல்லியில் மீண்டும் லேசான நிலநடுக்கம்.. பதறிய மக்கள்.. என்னாச்சு?

மாதிரிப்படம்

Updated On: 

11 Jul 2025 22:24 PM

டெல்லி, ஜூலை 11 : தலைநகர் டெல்லியில் மீண்டும் லேசான நிலநடுக்கம் (Delhi Earthquake) ஏற்பட்டுள்ளது. 2025 ஜூலை 11ஆம் தேதியான இன்று இரவு 7.45 மணியளவில் ஹரியானாவில் 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  டெல்லி மற்றும் ஹரியானா அருகே உள்ளன. இதனால் தான், ஹரியானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும், அது டெல்லியிலும் உணரப்படுகிறது. அதன்படி, 2025 ஜூலை 11ஆம் தேதியான இன்று ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில் 3.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டது.10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் ஹரியானாவின் ரோஹ்தக் மற்றும் பகதூர்கர் மாவட்டங்களிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறை டெல்லியில் நிலநடுக்கம் உணரப்படுகிறது. முன்னதாக, 2025 ஜூலை 10ஆம் தேதி ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில் 4.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி முழுவதும் உணரப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  எனவே, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : குஜராத்: 45 ஆண்டுகள் பழைமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

இந்தியாவின் வட மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, அசாம், மேகாலயா என வடகிழக்கு மாநிலங்களில் பல நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. 2025 ஜூன் மாதத்தில் கூடு, அசாமில் 5.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சமீப நாட்களில் டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கங்கள் உணரப்படுகிறது.

Also Read : ரூ. 1.05 லட்சம் கோடி மதிப்புள்ள 10 இராணுவ கொள்முதல் திட்டம்.. மத்திய அரசு ஒப்புதல்..!

நிலநடுக்கத்தின் தீவிரத்தின் அடிப்படையில் டெல்லி மண்லம் நான்கில் உள்ளது. இதன் மூலம் இந்த மண்டலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படலாம். டெல்லியில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் தீவிரம் 6 முதல் 6.9 வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நேபாளம் மற்றும் திபெத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களும் டெல்லியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.