பெண் குழந்தை பிறந்த ‘பாவம்’: இரட்டை கொலையில் முடிந்த வரதட்சணை சண்டை

Dowry Harassment Turns Deadly: வரதட்சணை கோரிக்கையால் ஏற்பட்ட தகராறில், பிரவீண் தனது மனைவி ராஜஸ்ரீ மற்றும் மாமனார் ராஜசேகரை சுத்தியால் தாக்கினார். பின்னர் டீசல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் கைது செய்த நிலையில், குற்றத்தை பிரவீண் ஒப்புக்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண் குழந்தை பிறந்த ‘பாவம்’: இரட்டை கொலையில் முடிந்த வரதட்சணை சண்டை

கோப்புப்படம்

Published: 

20 Mar 2026 11:14 AM

 IST

தெலுங்கானாவில் வரதட்சணை கோரிக்கையால் ஏற்பட்ட குடும்ப தகராறு தெலங்கானாவில் இரட்டை கொலையாக முடிந்தது. பெண் குழந்தை பிறந்ததையடுத்து, மனைவி ராஜஸ்ரீ மீது கூடுதல் வரதட்சணை கேட்டு பிரவீண் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். தந்தை வீட்டில் இருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், மனைவியும் மாமனாரும் சுத்தியால் தாக்கப்பட்டனர். பின்னர் இருவரின் மீதும் டீசல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டனர். சம்பவத்தை விபத்தாக காட்ட முயன்றாலும், காயங்கள் மற்றும் சான்றுகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. போலீசார் கைது செய்தபோது, குற்றத்தை பிரவீண் ஒப்புக்கொண்டார்; தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை

தெலங்கானா மாநிலம் கடிபிகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 51), இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராஜஸ்ரீ, தேஜஸ்வினி, மனோஜ்னா என மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ராஜஸ்ரீயை வாரங்கல் மாவட்டம் ஷயாம்பேட் ஹவேலியை சேர்ந்த பிரவீண் (வயது 30) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்தின் போது ரூ.3 லட்சம் வரதட்சணை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் பிரவீண் தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் வசித்து, அங்குள்ள ஒரு பிரபல குளிர்பான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இத்தம்பதிக்கு ஜெயான்ஷ் (வயது 2) என்ற மகன் உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், பெண் குழந்தை பிறந்ததிலிருந்து கூடுதல் வரதட்சணை கேட்டு பிரவீண் தனது மனைவி ராஜஸ்ரீயை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மாமனார் மற்றும் மனைவியை சுத்தியால் தாக்கிய மருமகன்

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்ரீ தனது தந்தை வீட்டில் பெண் குழந்தைக்கு அன்னபிரசன்ன பூஜை நடத்த வந்திருந்தார். கடந்த வாரம் பிரவீணும் அங்கு வந்தார். அதன்பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் வரதட்சணை கேட்டு மனைவியும் மாமனாரும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், ஆத்திரத்தில் இருந்த பிரவீண் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவி ராஜஸ்ரீ மற்றும் மாமனார் ராஜசேகரை சரமாரியாக தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். அதிலும் ஆத்திரம் அடங்காத பிரவீண், வீட்டில் இருந்த டீசலை எடுத்து இருவரின் மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Also Read: கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்ட குடும்பம்.. மாந்திரீகம் செய்வதாக எழுந்த சந்தேகத்தால் விபரீதம்!

சந்தேகத்தில் தொடங்கிய விசாரணை – குற்றம் ஒப்புக்கொண்ட பிரவீண்

சம்பவத்திற்குப் பிறகு, பிரவீண் ராஜஸ்ரீயின் அத்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தீ விபத்தில் மனைவியும் மாமனாரும் உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, இறந்தவர்களின் நெற்றியில் காயங்கள் இருப்பதும் அருகில் சுத்தியல் கிடப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜஸ்ரீயின் தங்கை தேஜஸ்வினி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பிரவீண் தனது மகன் மற்றும் மகளுடன் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், மனைவியும் மாமனாரையும் சுத்தியால் தாக்கி, டீசல் ஊற்றி எரித்துக் கொன்றதை பிரவீண் ஒப்புக்கொண்டார். தற்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்