மெட்ரோ பணியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்து.. பெங்களூரில் பரபரப்பு!
Crane Collapsed In Bengaluru Metro Construction | பெங்களூரில் சில முக்கிய பகுதிகளில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3.45 மணி அளவில் கிரேன் கீழே விழுந்து விபத்துள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான கிரேன்
பெங்களூரு, ஜனவரி 15 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) சில்க் போர்டில் இருந்து சர்வதேச விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ கட்டுமான பணிகள் அங்கு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மெட்ரோ பணிகளின் போது அங்கு ராட்சத கிரேன் கவிழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த கிரேன் விபத்து சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளான ராட்சத கிரேன்
மெட்ரோ கட்டுமான பணியின் போது நேற்று (ஜனவரி 14, 2026) அதிகாலை 3.45 மணி அளவில் அகரா பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வந்துள்ளன. அப்போது மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கிரேன் மூலம் கார்டரை தூக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். 100 டன் எடை கொண்ட இரும்பு கார்டரை தூக்கும்போது கிரேன் உடன் இணைக்கப்பட்டு இருந்த 4 ஜாக்குகளில் ஒரு ஜாக் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்டம்.. சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்பு!
ஜாக் துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட விபத்து
ஒரு ஜாக் துண்டிக்கப்பட்ட நிலையில், பாரம் தாங்காமல் கிரேன் திடீரென கவிழ்ந்து விழுந்தது. கிரேன் பின் பக்கமாக கீழே விழுந்த நிலையில், அதன் மேல் பகுதி வானை பார்த்தபடி தூக்கியுள்ளது. இந்த நிலையில், நிலமை கையை மீறி சென்றதனை உணர்ந்த கிரேன் ஓட்டுநர், உடனடியாக கிரேனில் இருந்து கீழே குதித்து உயிர் பிழைத்துக்கொண்டுள்ளார். இதனால் இந்த பெரிய விபத்தில் எந்த வித உயிர் சேதமும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது.
இதையும் படிங்க : 2026 குடியரசு தினவிழா…சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வெளிநாட்டு முக்கியஸ்தர்…யார் அவர்!
விபத்து குறித்து விளக்கம் அளித்த மெட்ரோ பொறியாளர்
விபத்து நடந்த அனறு பயன்படுத்தப்பட்ட கிரேன் சுமார் 500 கிலோ எடையை தூக்கும் தன்மை கொண்டதாகவும், ஜாக் துண்டிக்கப்பட்டதன் காரணமாகவே கிரேன் கவிழுந்து விபத்துக்குள்ளானதாகவும் அந்த மெட்ரோ பணி பொறுப்பு பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற எச்.எஸ்.ஆர் போக்குவரத்து போலீசாரும் விபத்து நடைபெற்ற இடத்தில் சோதனை மேற்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.