திருமண வரவேற்பில் மணமகளை துப்பாக்கியால் சுட்ட நபர்.. காதல் விவகாரத்தில் கொடூர செயல்!
Bride Shot In Wedding Reception | பீகாரில் திருமண வரவேற்புக்காக மேடையில் நின்றுக்கொண்டு இருந்த மணமகளை அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் அந்த நபர் இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
பாட்னா, பிப்ரவரி 26 : பீகார் (Bihar) மாநிலம், பக்சார் மாவட்டத்தை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண் ஆர்த்தி குமாரி. இவருக்கு பிப்ரவரி 24, 2026 அன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திருமண மேடையில் நின்றுக்கொண்டு இருந்த மணமகள் ஆர்த்தியை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மணமேடையில் இருந்த மணமகளுக்கு துப்பாக்கிச்சூடு
பிப்ரவரி 24, 2026 அன்று ஆர்திக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தார் முடிவு செய்த நிலையில், அன்றைய தினம் ஆர்த்தி மணமகனுடன் திருமணம் மேடையில் நின்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது உறவினர்கள் திருமண சடங்குகளை செய்துக்கொண்டு இருந்துள்ளனர். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணப்பெண்ணை சுட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : “மக்கள் நலனுக்காக பாடுபட்டுவர் ஜெயலலிதா”.. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!
காதல் விவகாரத்தில் இளம் பெண் மீது தாக்குதல்
துப்பாக்கியால் சுட்டதில் அந்த பெண்ணின் வயிற்றில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் படுகாயம் அடைந்த மணமகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு வெளிநாட்டினர் எதற்காக சுற்றுலா செல்ல வேண்டும்… ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரின் வீடியோ வைரல்!
இந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தார் இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இளம் பெண்ணை சுட்டது தீபந்து என்பது தெரிய வந்துள்ளது. காதல் விவகாரம் காரணமாக அவர் இளம் பெண் மீது இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார் என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் தலைமறைவாக உள்ள தீபந்துவை தேடி வருகின்றனர்.