Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாப்ஸ் (BAPS) தலைவர் மகாந்த் ஸ்வாமி மகாராஜாவின் 92வது பிறந்தநாள் – கோலாகல கொண்டாட்டம்

பாப்ஸ் (BAPS) அமைப்பின் தற்போதைய ஆன்மிகத் தலைவர் மகந்த் சுவாமி மகாராஜின் 92வது பிறந்தநாள் விழா, குஜராத் மாநிலம் வதோதராவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற சிறப்புக் காட்சிகள், வீடியோக்கள் மற்றும் ஊக்கமளிக்கும் உரைகளுடன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பாப்ஸ் (BAPS) தலைவர் மகாந்த் ஸ்வாமி மகாராஜாவின் 92வது பிறந்தநாள் – கோலாகல கொண்டாட்டம்
மகாந்த் ஸ்வாமி மகாராஜாவின் 92வது பிறந்தநாள்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Feb 2026 21:06 PM IST

பாப்ஸ் (BAPS) அமைப்பின் தற்போதைய ஆன்மிகத் தலைவர் மகந்த் சுவாமி மகாராஜின் 92வது பிறந்தநாள் விழா, குஜராத் மாநிலம் வதோதராவில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. கடந்த ஐந்து மாதங்களாக ஆன்மிக உற்சாகத்துடன் எதிரொலித்த ஜென்ம ஜெயந்தி மகோத்சவம், ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்ற சிறப்புக் காட்சிகள், வீடியோக்கள் மற்றும் ஊக்கமளிக்கும் உரைகளுடன் உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் நடைபெற்ற 2 லட்சம் பக்தர்களின் கூட்டு ஆரத்தி, மக்களிடையே ஆன்மிக அதிசய அனுபவத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கான தீபங்கள் ஒளிர, பக்தர்கள் ஆரத்தி செய்து வழிபட்ட தருணம், விழாவில் பங்கேற்ற அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.

கின்னஸ் உலக சாதனை

மகாந்த் ஸ்வாமி மகாராஜாவின் அறிவுரையின் பெயரில், சத்சங்க தீக்ஷா என்னும் ஆன்மிக நூலை முழுமையாக மனப்பாடம் செய்து, ஒரே ஆண்டில் 15,666 குழந்தைகள் ஒருங்கிணைந்து படித்து நிகழ்வுக்கு கின்னஸ் உலக சாதனை நிறுவனம் நிறுவனம் அங்கீகாரம் வழங்கியது. 315 ஸ்லோகங்களை கொண்ட இந்த நூல், ஆன்மிகம், ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரிய கையேடாக விளங்குகிறது. இந்த சாதனையில் பங்கேற்ற குழந்தைகளில் 12,723 பேர் நேரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கின்னஸ் அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற்றனர். இச்சாதனை, உலகளவில் அபூர்வமானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமாக கருதப்படுகிறது.

சிறப்பு விருந்தினர்கள்

இந்த பிரமாண்ட விழாவில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பேசும்போது, மகாந்த் சுவாமி மகாராஜா குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்களை விதைத்து, ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கி வருகிறார். சனாதன தர்மத்தை பாதுகாக்க, பாப்ஸ் அமைப்பு கோயில்கள் மூலம் எண்ணற்ற சேவைகளை செய்து வருகிறது என்று பாராட்டினார்.

மேலும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா அனுப்பிய வாழ்த்து கடிதமும் இந்த விழாவில் வாசிக்கப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, பழங்குடியினர் பகுதிகளுக்கான மொபைல் பள்ளி திட்டத்தை மகாந்த் சுவாமி மகாராஜா தொடங்கி வைத்தார். மேலும், குழந்தைகளுக்காக பாப்ஸ் கிட்ஸ் என்ற சிறப்பு யூடியூப் சேனலும் தொடங்கப்பட்டது.
மகாந்த் சுவாமி மகாராஜா எழுதிய இன்சைட்ஸ் ஃபிரம் தி சாஸ்டங்க் தீக்ஷா என்ற ஆன்மிக நூலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

மகாந்த் ஸ்வாமி மகாராஜாவின் ஆன்மிக உரை

விழாவின் இறுதியில், மகாந்த் ஸ்வாமி மகாராஜா பக்தர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது பேசிய அவர் பிரமுக் சுவாமி மகாராஜாவின் கொள்கை பிறரின் மகிழ்ச்சியில்தான் நமது மகிழ்ச்சி இருக்கிறது. இந்த சந்நியாச அமைப்பின் ஒற்றுமை, புரிதல் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் உருவானது. கின்னஸ் உலக சாதனை என்பது குழந்தைகளின் உழைப்பின் பலன். இந்த பெருமை குருமார்களுக்கும், சன்னியாசிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சொந்தமானது” என்று அவர் தெரிவித்தார்.