வளர்ந்த இந்தியாவை நோக்கி மற்றொரு படி.. ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. சிறப்புகள் என்ன?

India AI Impact Summit: ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த எக்ஸ்போவில் ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளின் பவிலியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து 600-க்கும் மேற்பட்ட உயர்திறன் கொண்ட ஸ்டார்ட்அப்புகள் தங்கள் புதுமைகளை வெளிப்படுத்துகின்றன.

வளர்ந்த இந்தியாவை நோக்கி மற்றொரு படி.. ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. சிறப்புகள் என்ன?

கோப்பு புகைப்படம்

Published: 

16 Feb 2026 19:28 PM

 IST

டெல்லி, பிப்ரவரி 16, 2026: ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) என்பது தொழில்நுட்ப உலகில் முள் கிரீடம் போன்றது; அதை தாங்குவது கடினம் என்று உலகமெங்கும் பேசப்படுகிறது. வெள்ளம்போல் பரவி வரும் ஏஐ… நம்மை மூழ்கடிக்குமா, கரை சேர்க்குமா? இந்தப் பெரும் அபாயத்திலிருந்து தப்பிக்க வேண்டுமா, அல்லது இதையே ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டுமா? எல்லாமே சிக்கலான கேள்விகள்தான். அதனால்தான், “AI” என்ற ஆபத்தான விளையாட்டை பாதுகாப்பாகவும் உறுதியாகவும் எப்படி ஆடுவது என்பதை கற்றுக்கொள்வோம் என்று இந்தியா அழைப்பு விடுக்கிறது.

AI இம்பாக்ட் எக்ஸ்போ 2026:

இந்தச் சூழலில், “விகசித் பாரத்” நோக்கி மத்திய அரசு இன்னொரு முக்கிய அடியை எடுத்துள்ளது. உலகத் தரத்தில் ஒரு தொழில்நுட்ப புரட்சியாக, இந்தியா AI இம்பாக்ட் எக்ஸ்போ 2026 டெல்லி, பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சி, இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் உடனும் இணைந்து நடைபெறுகிறது. “சர்வஜன ஹிதாய, சர்வஜன சுகாய” (அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி) என்பதே இதன் மையத் தீம்.

மேலும் படிக்க: பொது வாழ்வு.. வர்த்தக ஒப்பந்தங்கள்.. மனம் திறந்து பேசிய பிரதமர் மோடி

சிறப்புகள் என்ன?

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த எக்ஸ்போவில் ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளின் பவிலியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து 600-க்கும் மேற்பட்ட உயர்திறன் கொண்ட ஸ்டார்ட்அப்புகள் தங்கள் புதுமைகளை வெளிப்படுத்துகின்றன. 300-க்கும் மேற்பட்ட கண்காட்சிகள், 500-க்கும் மேற்பட்ட நேரடி டெமோக்கள் இடம்பெறுகின்றன. உலகத் தரம் வாய்ந்த 40 சிஇஓக்களை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

குளோபல் சவுத் பகுதியில் நடைபெறும் முதல் உலகளாவிய AI சம்மிட் இந்தியாவில் நடைபெறுவது பெருமைக்குரியது. இந்த மாநாட்டின் மூலம் எதிர்பார்ப்புகள் என்ன?

  • AI ஒழுங்குமுறை, புதுமை, எதிர்காலக் கொள்கைகள், வேலைவாய்ப்பு மாற்றம் ஆகியவை ஆராய்ச்சியுடன் இணைக்கப்படும்.
  •  உள்நாட்டு மொழிகளில், குடிமக்கள் சேவைகளுக்கு பயன்படும் இந்திய AI மாடல்கள் குறித்து விவாதம் நடைபெறும்.
  •  AI பாதுகாப்பு, நம்பகத்தன்மை, எதிர்கால வேலைவாய்ப்புகள் குறையுமா அதிகரிக்குமா என்ற மதிப்பீடு கிடைக்கும்.
  •  வளர்ந்து வரும் நாடுகளுக்கு AI ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தெளிவு வரும்.
  •  அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய AI சந்தை 17 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பீடு.

உலகிற்கு அதிகமான வேலைவாய்ப்பு வழங்கும் நாடு இந்தியாதான். புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பதில் நாம் முன்னணியில் இருக்கிறோம். அப்படியிருக்க, AI விஷயத்தில் ஏன் பின்னடைவோம்? அதனால்தான், AI-யின் அடுத்த அத்தியாயம் இந்தியாவே என்று உலக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

என்றாலும், இந்தியாவில் சுமார் 58 லட்சம் பேர் ஐடி துறையை நம்பி வாழ்கிறார்கள். AI வெள்ளத்தில் 75 சதவீத வேலைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் உள்ளது. இத்தகைய சவால்கள் குறித்த ஆழமான விவாதங்களே டெல்லி AI இம்பாக்ட் சம்மிட்டின் மையமாக இருக்கும்.

Follow Us
Related Stories
இந்திய ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி.. ஈஷா யோகா மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்..
மனைவியை கொலை செய்து இறந்த உடலுடன் இரண்டு நாட்கள் குடும்பம் நடத்திய நபர்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
ஐடி டூ முதலீட்டு வங்கியாளர்.. ஐஐஎம்பி-யில் தங்கப் பதக்கம் வென்று த்வீத் மேத்தா சாதனை
ஈரான் – அமெரிக்க போர் பதற்றம் – 3 வாரங்களில் மாறிய இந்தியர்களின் மனநிலை – ஆச்சரியமளிக்கும் கருத்து கணிப்பு முடிவுகள்
நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக இந்தித் திணிப்பு வாதம்? முதல்வருக்கு மத்திய அமைச்சர் கேள்வி
மூன்றாவது குழந்தையை கருக்கலைப்பு செய்யாததால் ஆத்திரம்.. மனைவி மற்றும் மகள்களை நீச்சல் குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த நபர்!
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்