டெல்லியில் வெடித்து சிதறிய கார்.. சம்பவ இடத்திற்கு விரையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா..

டெல்லி செங்கோட்டை அருகே நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதைத் தொடர்ந்து அந்த கார் வெடித்து சிதறியது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த பலரும் காயமடைந்தனர். அதே சமயத்தில், 10 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். நவம்பர் 10, 2025 தேதியான இன்று மாலை 7 மணி அளவில் இந்த குண்டுவெடி விபத்து நடைபெற்றுள்ளது.

டெல்லியில் வெடித்து சிதறிய கார்.. சம்பவ இடத்திற்கு விரையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா..

கோப்பு புகைப்படம்

Updated On: 

10 Nov 2025 21:57 PM

 IST

டெல்லி, நவம்பர் 10, 2025: டெல்லி செங்கோட்டை அருகே நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதைத் தொடர்ந்து அந்த கார் வெடித்து சிதறியது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த பலரும் காயமடைந்தனர். அதே சமயத்தில், 10 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். நவம்பர் 10, 2025 தேதியான இன்று மாலை 7 மணி அளவில் இந்த குண்டுவெடி விபத்து நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் என்.ஐ.ஏ, என்.எஸ்ஜி (NSG) குழுக்கள் மற்றும் எஃப்.எஸ்.எல். (FSL) இணைந்து முழுமையான விசாரணை தொடங்கியுள்ளன. அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த சூழலில், உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு இன்னும் சற்று நேரத்தில் சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

டெல்லியில் செங்கோட்டை அருகே மக்கள் அதிகம் கூடும் இடத்தில், மாலை 7 மணி அளவில் அங்கே நின்று கொண்டிருந்த ஹூண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்த கார்களும் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ள நிலையில், தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஹைதராபாத், சென்னை, உத்தரபிரதேசம், மும்பை, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு காவல்துறை அதிகாரிகளும் NIA உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரையும் உள்துறை அமைச்சர் அமித்ஷா:


இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: “இன்று மாலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் சில பாதசாரிகள் காயமடைந்தனர், மேலும் சில வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. NSG மற்றும் NIA குழுக்கள் FSL உடன் இணைந்து தற்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன.

அருகிலுள்ள அனைத்து CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் நான் பேசியுள்ளேன். டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம், மேலும் முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். முடிவுகள் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். நான் விரைவில் சம்பவ இடத்திற்கும் பின்னர் மருத்துவமனைக்கும் செல்ல உள்ளேன்,” என தெரிவித்தார்.