டெல்லியில் நிலநடுக்கம்.. வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்த பொதுமக்கள்.. பதற்றம்!

Strongest Tremors Felt in Delhi | டெல்லியில் இன்று (ஜூலை 10, 2025) காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சற்று சக்தி வாய்ந்ததாக இருந்த நிலையில், வீடுகளில் இருந்த பொருட்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

டெல்லியில் நிலநடுக்கம்.. வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்த பொதுமக்கள்.. பதற்றம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

10 Jul 2025 11:18 AM

டெல்லி, ஜூலை 10 : டெல்லியில் இன்று (ஜூலை 10, 2025) காலை நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக இதுவரை இத்தகைய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தாங்கள் கண்டதில்லை என்றும், வீட்டில் இருக்கும் பொருட்கள் வேகமாக ஆடியதாகவும் பொதுமக்கள் கூறிவருகின்றனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்த நிலையில், சற்று பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

டெல்லியில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 10, 2025) காலை சற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளாவில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 15 விநாடிகள் நீடித்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருந்த பொருட்கள் ஆடிய நிலையில், அலறி அடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதையும் படிங்க : குஜராத்: 45 ஆண்டுகள் பழைமையான பாலம் இடிந்து விழுந்து விபத்து.. 4 பேர் உயிரிழந்த சோகம்..

4.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

டெல்லியில் இதுவரை இத்தகைய சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்படாத நிலையில், பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். டெல்லியில் காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தங்களுக்கு மிகுந்த பயத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பதற்றத்தில் வானை வட்டமடித்த பறவைகள்

நிலநடுக்கம் காரணமாக பறவைகள் வானில் வட்டமடிக்க தொடங்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல, வீடுகளில் பொருட்கள் ஆடுவது, கட்டங்கள் அதிர்வை எதிர்கொள்வது உள்ளிட்ட சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. டெல்லியில் காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்கு பொதுமக்கள் கடும் பீதியில் உரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.