ஆதரவற்ற சிறுமி.. அடைக்கலம் கொடுப்பது போல் பாலியல் வன்கொடுமை செய்த மாமா!
14 Years Old Orphan Gril Misused By Her Uncle | உத்தர பிரதேசத்தில் தாய், தந்தை என ஆதரவு இல்லாமல் தவித்து வந்த சிறுமி தனது மாமா உடன் வசித்து வந்துள்ளார். அந்த நபர் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மாதிரி புகைப்படம்
லக்னோ, டிசம்பர் 04 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், முசாபர்நகரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமியின் தாயார் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் சிறுமி தாய், தந்தை என யாரும் இல்லாமல், ஆதரவு இன்றி தவித்து வந்துள்ளார். அப்போது சிறுமியின் மாமா வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார்.
ஆதறவற்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மாமா
தாய், தந்தை என தனக்கு ஆதரவு கொடுக்க யாரும் இல்லாததால் அந்த சிறுமி தனது மாமா வீட்டில் வசித்த நிலையில், அந்த நபர் சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்டுள்ளார். அதாவது வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவ்வாறு பல நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்திக்கொண்டு அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க : 1,000 உயரம், 55 மீட்டர் நீளம்.. இந்தியாவின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் விசாகப்பட்டினத்தில் திறப்பு!
தனக்கு நடந்த கொடுமை குறித்து வெளியே சொன்ன சிறுமி
தனது மாமா தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி அது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சிறுமியை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று அவரது மாமாவின் மீது புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க : வேலைக்கு செல்லாமல் பப்ஜி விளையாடிய கணவன்.. கண்டித்ததால் கழுத்தை நெறித்து மனைவி கொலை!
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
இந்த விவகாரம் தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் மாமா மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அந்த நபரிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆதரவற்ற சிறுமியை சொந்த மாமாவே பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.