Health Tips: உடலில் இந்த வைட்டமின் குறைபாடா? கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம்!
Liver Health: ஆரோக்கியமான கல்லீரலுக்கு போதுமான அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி அவசியம். ஆரோக்கியமான உடலை பராமரிக்க கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். மோசமான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.

கல்லீரல் ஆரோக்கியம்
கல்லீரல் (Liver) நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இது உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை வழங்கி, இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்டும். அல்புமின் மற்றும் உறைதல் காரணிகள் போன்ற முக்கியமான புரதங்களை உருவாக்குகிறது. கல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அதிகரிக்கும்போது, கல்லீரல் கொழுப்பாக மாறும். இது தவிர, கல்லீரலின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் சில வைட்டமின்கள் (Vitamin) உள்ளன. உடலில் இந்த வைட்டமின்களின் குறைபாடு இருந்தால், இது கல்லீரலை சேதப்படுத்தும்.
கல்லீரலுக்கு தேவையான வைட்டமின்கள் எது..?
ஆரோக்கியமான கல்லீரலுக்கு போதுமான அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி அவசியம். ஆரோக்கியமான உடலை பராமரிக்க கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். மோசமான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இன்றைய காலத்தில் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், சில வைட்டமின்களின் பற்றாக்குறையும் கல்லீரல் தொடர்பான நோய்களை தரும்.
ALSO READ: உடலில் இந்த வைட்டமின் குறைபாடா…? எச்சரிக்கை! மாரடைப்பு வரலாம்!
வைட்டமின் ஏ:
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் ஏ அவசியமான வைட்டமின்களில் ஒன்றாகும். வைட்டமின் ஏ கல்லீரலில் காணப்படுகிறது. குறிப்பாக கல்லீரல், மீன் மற்றும் முட்டை போன்ற விலங்கு பொருட்களில் ஏராளமாக உள்ளது. கல்லீரல் வைட்டமின் ஏன் முக்கிய மூலமாகும். மேலும், இதை உடலில் சேமிக்கிறது. வைட்டமின் ஏ என்பது கொழுப்பின் கரைக்கூடிய வைட்டமின் ஆகும். இது கண்கள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. வைட்டமின் ஏ குறைபாடு கல்லீரை நேரடியாக பாதிக்கும்.
வைட்டமின் டி:
ஆரோக்கியமான கல்லீரலுக்கு வைட்டமின் டியும் அவசியமான ஒன்று. இது கல்லீரலில் குவிந்து கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். வைட்டமின் டி குறைபாடு மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், ஹெபடைடிஸ் பி மற்றும் சி மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற கல்லீரல் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இது கல்லீரல் திசுக்களில் வீக்கத்தின் அபாயத்தை அதிகரிக்கும். வைட்டமின் டி உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால், சிறிது நேரம் வெயிலில் நடந்து, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் டி உணவு வழியாக பெற நினைப்பவர்கள் முட்டை, பால், பச்சை காய்கறிகள், பீன்ஸ், சோயா பொருட்கள், வாழைப்பழங்களை சாப்பிடலாம்.
ALSO READ: உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா? இந்த 5 அறிகுறிகள் பதில் சொல்லும்!
வைட்டமின் பி:
வைட்டமின் பி குறைபாடும் கல்லீரலுக்கு முக்கியம். இவை கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற சில நோய்களை தடுக்கவும் உதவுகின்றன. வைட்டமின் பி12 கல்லீரலில் சேமிக்கப்படுவதுடன், இரத்த சிவப்பணுக்களின் அபாயத்தை அதிகரிக்கும். ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்க, முட்டை, பால், பச்சை காய்கறிகள், பீன்ஸ், வாழைப்பழங்களில் நல்ல அளவு வைட்டமின் பி உள்ளது.