நீண்ட தூர கார் பயணங்களில் இடுப்பு வலி வருதா? வலியைத் தடுக்கும் சிறந்த 8 குஷன்கள்

Back Pain Relief: நீண்ட தூர பயணங்களின் போது பலருக்கும் முதுகு வலி மற்றும் இடுப்பு வலி ஏற்படுவது வழக்கம். இது நீண்ட காலம் தொடர்ந்தால் முதுகெலும்பு பிரச்னை வர வாய்ப்புள்ளது. இந்த கட்டுரையில் இடுப்பு வலியைத் தடுக்கும் 8 சிறந்த குஷன்கள் குறித்து பார்க்கலாம்.

நீண்ட தூர கார் பயணங்களில் இடுப்பு வலி வருதா? வலியைத் தடுக்கும் சிறந்த 8 குஷன்கள்

மாதிரி புகைப்படம்

Published: 

16 Sep 2025 16:38 PM

 IST

கார் (Car) ஓட்டும் போது குறிப்பாக நீண்ட நேர பயணங்களில் டிராஃபிக் நெரிசலில் சிக்கும் போது இடுப்பு பகுதியில் கடுமையான வலி மற்றும முதுகு வலி ஏற்படும். தவறாக அமரும் நிலையால் காலப்போக்கில் முதுகெலும்பு பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்கவும் உட்காரும் போது சரியான நிலையில் நம்மை வைத்துக்கொள்ளவும் லம்பர் (Lumbar) சப்போர்ட் குஷன்கள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. இவை தினசரி பயணிப்பவர்கள், லாரி டிரைவர்கள் போன்ற நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இடுப்புக்கு சப்போர்ட் பண்ணும் குஷன்கள்

  • மெமரி ஃபோம் குஷன் (Memory Foam) நம் உடலின் வடிவத்துக்கு ஏற்ப பொருந்தி, தனிப்பட்ட வசதியை அளிக்கும்.
  • ஏர்கோனாமிக் லம்பார் பில்லோ (Ergonomic Pillow) உங்கள் உடலின் வடிவத்துக்கு ஏற்ப பொருந்தி தனிப்பட்ட வசதியை அளிக்கும்.
  • இன்ஃபிளேடபிள் சப்போர்ட் – காற்றை நிரப்பி தேவைக்கு நம் தேவைக்கு ஏர்ப கடினத்தன்மையை மாற்றிக்கொள்ளலாம்.
  • ஜெல் குஷன்கள் (Gel Cushion)  –  வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியுடன் நன்றாக சப்போர்ட் தரும்.

இதையும் படிக்க : உங்கள் கால்களில் இந்த பிரச்னை இருக்கா? இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்

இடுப்பு வலியைத் தடுக்கும் சிறந்த குஷன்கள்

1.ஃபோவேரா பேக் சப்போர்ட் குஷன் (FOVERA Back Support & Coccyx Seat Cushion)

ஆர்த்தோபிடிக் வடிவமைப்பு, ஜெல் மெமரி ஃபோம் கொண்டது. நீண்ட நேர பயணிக்கும் போது, ஆபிஸ் வேலை போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம். இடுப்பு மற்றும் முதுகு வலியைக் குறைக்கும்.

2. டாக்டர் டிரஸ்ட் யுஎஸ்ஏ பேக்ரெஸ்ட் ஃபார் கார் சீட் (Dr Trust USA Backrest for Car Seat)

உயர்தர மெமரி ஃபோம் கொண்டு தயாரிக்கப்பட்டது. முதுகெலும்பை நேராக வைத்துக் கொண்டு தவறான உட்காரும் பழக்கத்தை சரி செய்கிறது. நீண்ட பயணங்களில் இடுப்பு வலி குறையும்.

3. ஃபிரிடோ கார் பேக்ரெஸ்ட் குஷன் (Frido Car Backrest Cushion)

லம்பார் சப்போர்டில் சிறப்பான வடிவமைப்பு கொண்டது. நீண்ட நேரம் கார் ஓட்டும் போது முதுகு தண்டின் நிலையை ஒரே சீராக வைத்திருக்கிறது. தினசரி கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் மற்றும் டிராவலர்களுக்கு சிறந்தது.

4. கேர்ஃபோர்ஸ் பேக் சப்போர்ட் குஷன் (Careforce Back Support Cushion)

மெமரி ஃபோம், எர்கோனாமிக் வடிவமைப்புடன், நீண்ட நேரம் அமரும் வசதியை வழங்குகிறது. இதனால் வலி குறையும்.

இதையும் படிக்க : குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 10 இந்திய உணவுகள் – புற்றுநோய் மருத்துவர் பகிர்ந்த தகவல்

5. கோஸ்டோ ஆர்த்தோபேடிக் பேக் பிரேஸ் மெமரி ஃபோம் ( Kossto Orthopaedic Back Brace Memory Foam)

இடுப்புக்கு சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெமரி ஃபோம் காற்று செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது.

6. சைம்சன் கூலிங் ஜெல் இன்ஃபியூஸ்டு பேக் சப்போர்ட் (Saimson Cooling Gel Infused Back Support)

கூலிங் ஜெல் மற்றும் மெமரி ஃபோம் இணைப்புடன் கிடைக்கிறது. நீண்ட தூர பயணங்களின் போது வெப்பத்தை குறைத்து முதுகை நல்ல சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7. ஒரிஸ்டா ஜெல் பிளெண்டட் மெமரி ஃபோம் குஷன் (Orista Gel Blended Memory Foam Cushion)

இடுப்பு வலிக்கு சிறந்தது. ஜெல் கலந்த மெமரி ஃபோம், உடல் எடையை சமமாக பகிர்ந்து சரியான உட்காரும் நிலையை அளிக்கிறது.

8. இன்ஃபிளேடபிள் லம்பர் சப்போர்ட் பிள்ளோ (Inflatable Lumbar Support Pillow)

எளிதில் காற்று செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை குறைவாக இருக்கும் என்பதால் அனைத்து இடங்களுக்கும் எடுத்து செல்லலாம்.