Health Tips: ஸ்மார்ட்போன் போதை..! உங்கள் ஆரோக்கியத்தை இப்படி கெடுக்கும்..?
Smartphone Side Effects: விந்தணு வெப்பத்தை விரும்புவதில்லை. இதன் காரணமாக மொபைல் போன்களின் வெப்பம் விந்தணுக்களை சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எந்த காரணத்திற்காகவும் சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக உயர்ந்தால், ஆண் விந்து உற்பத்தி பாதிக்கப்படும். இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, உங்கள் மொபைல் போனை உங்கள் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருக்காதீர்கள்.

ஸ்மார்ட்போன்
இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் (Smart Phone) இல்லாமல் யாராலும் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. ஸ்மார்ட் போன்கள் இப்போது நம் வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டன. நாம் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், நம் போன் நம்முடன் இருக்கும். சிலர் குளியலறைக்கு (Bathroom) செல்லும்போது கூட அதை எடுத்து சென்று பயன்படுத்துகிறார்கள். அதன்படி, பெரும்பாலான நேரத்தை ஸ்மார்ட் போன்களுடன் செலவழிக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் உடலில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்து என்பது தெரியுமா..? தெருவில் அல்லது வேறு எங்காவது செல்லும்போது நம் மொபைல் போன்களை நம் பேன்ட் பாக்கெட்டுகளில் வைக்கிறோம். ஆனால் அந்தப் பழக்கம் ஆண்களுக்கு கடுமையான தீங்கு விளைவித்துள்ளது.
செல்போன்களை பைகளில் எடுத்துச் செல்வது ஆண் மலட்டுத்தன்மையை அதிகரிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் செல்போன்கள் மூலம் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஞாபக மறதி? இதற்கு மொபைல் போன் காரணமா?
விந்தணு எண்ணிக்கை குறையும்:
விந்தணு வெப்பத்தை விரும்புவதில்லை. இதன் காரணமாக மொபைல் போன்களின் வெப்பம் விந்தணுக்களை சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எந்த காரணத்திற்காகவும் சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக உயர்ந்தால், ஆண் விந்து உற்பத்தி பாதிக்கப்படும். மொபைல் போன்களுக்கு அவற்றின் சொந்த வெப்பம் உண்டு நாம் போனை நம் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது இது இயற்கையாகவே நம் உடலைப் பாதிக்கும். மொபைல் போன்களால் உருவாகும் வெப்ப வகை ஆண் விந்தணுக்களின் தரம் மற்றும் அளவு இரண்டையும் எதிர்மறையாக பாதிக்கிறது.
இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க, உங்கள் மொபைல் போனை உங்கள் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருக்காதீர்கள். கூடுதலாக, சிலர் லேப்டாப்கள் அல்லது டேப்லெட்களை மடியில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் வேலை செய்கிறார்கள். இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது முக்கியம்.
ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்:
தசை மற்றும் எலும்பு பிரச்சினைகள்:
நாம் மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது நம் கழுத்து, முதுகு, தோள்கள் மற்றும் கைகளை பாதிக்கும். தொடர்ந்து நம் ஸ்மார்ட் போன்களை பார்ப்பதற்காக குனிவது கழுத்து வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தும். இது டெக் நெக் என்று அழைக்கப்படுகிறது.
மன ஆரோக்கியத்தில் பாதிப்பு:
உங்கள் ஸ்மார்ட்போனில் தொடர்ந்து சமூக ஊடகங்கள், விளையாட்டுகள் அல்லது வீடியோக்களைப் பார்ப்பது படிப்படியாக நமது மூளையை சோர்வடையச் செய்கிறது. தூக்க நேரம் குறைந்து, தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. நீங்கள் ஆன்லைனில் அதிக நேரம் செலவழித்து, நிஜ வாழ்க்கையில் ஈடுபடும் நேரத்தைக் குறைக்கும்போது, நீங்கள் தனிமையாகவும் சோகமாகவும் உணரத் தொடங்குகிறீர்கள். இந்தப் பிரச்சினைகள் படிப்படியாக மனச்சோர்வு, பதட்டம் மற்றும் மன அழுத்தமாக உருவாகலாம். இந்தப் போதை குழந்தைகளுக்கு படிப்பிலிருந்து கவனச்சிதறல், கோபம் மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
ALSO READ: மன அழுத்தம் குறைய.. ஆரோக்கியம் மேம்பட.. காலையில் எழுந்து 5-10 நிமிடங்கள் இதை செய்தாலே போதும்!
கண் ஆரோக்கியத்திற்கு ஆபத்து:
அதிகமாக ஸ்மார்ட் போனை பயன்படுத்தும் பழக்கம் உங்கள் கண்களுக்கு மிகவும் ஆபத்தானது.ஸ்க்ரீன்களில் இருந்து வெளிப்படும் ப்ளூ ரே கண்களில் தீங்கு விளைவிக்கும். நீண்ட நேரம் ஸ்க்ரீனை பார்ப்பது கண் எரிச்சல், மங்கலான பார்வை மற்றும் உலர் கண் நோய்க்குறியை ஏற்படுத்தும். உங்கள் பார்வை படிப்படியாக மோசமடையலாம்.