Health Tips: 6-6-6 நடைப்பயிற்சி என்றால் என்ன? இது ஏன் உடலுக்கு முக்கியம்? மருத்துவர் அருண் குமார் விளக்கம்!

6-6-6 Walking Routine: 6-6-6 நடைப்பயிற்சி ஒரு நேரடியான நல்ல பலனை தரக்கூடிய தீர்வாகும். இது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் எளிதான வழிகளில் ஒன்றாகும். இந்த உடற்பயிற்சி வழக்கத்திற்கு வாரத்தில் ஆறு நாட்கள் என ஒரு நாளைக்கு 6 முறை 6 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும்

Health Tips: 6-6-6 நடைப்பயிற்சி என்றால் என்ன? இது ஏன் உடலுக்கு முக்கியம்? மருத்துவர் அருண் குமார் விளக்கம்!

மருத்துவர் அருண் குமார்

Published: 

06 Oct 2025 22:38 PM

 IST

இன்றைய நவீன வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு பணி சுமை (Work Pressure), மோசமான உணவு பழக்கவழக்கங்கள், உடல் செயல்பாடு இல்லாமை போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன. இதை சரிசெய்ய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை மேற்கொள்ள வேண்டும் என விவாதிக்கப்படுகிறது. இந்தநிலையில், நம் உடலை சரியான முறையில் பராமரிக்க 6-6-6 முறையை பின்பற்றலாம் என பிரபல குழந்தை நல மருத்துவர் அருண் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நடைப்பயிற்சி (Walking) விதி மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகளை விளக்கியுள்ளார்.

ALSO READ: ஆரோக்கிய உணவாக தோன்றும் இவை ஆபத்து.. மருத்துவர் சஹானா கூறும் அறிவுரை!

6-6-6 நடைப்பயிற்சி என்றால் என்ன..?


பிரபல குழந்தை நல மருத்துவர் அருண் குமாரின் கூற்றுப்படி, 6-6-6 நடைப்பயிற்சி ஒரு நேரடியான நல்ல பலனை தரக்கூடிய தீர்வாகும். இது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் எளிதான வழிகளில் ஒன்றாகும். இந்த உடற்பயிற்சி வழக்கத்திற்கு வாரத்தில் ஆறு நாட்கள் என ஒரு நாளைக்கு 6 முறை 6 நிமிடங்கள் மேற்கொள்ளப்படும் விறுவிறுப்பான நடைப்பயிற்சி முறையாகும். இந்த நடைப்பயிற்சிக்கு முன் 6 நிமிட வார்ம்-அப், பின்னர் 6 நிமிட ரிலாக்ஸ் முறையையும் பின்பற்றலாம். இந்த 6 நாட்கள் தினசரி பழக்கவழக்கம் ஆரோக்கியமான நடைப்பயணத்திற்கு உடலை தயார்படுத்துவது மட்டுமல்லாமல், உடற்பயிற்சிக்குப் பிறகு பாதுகாப்பான உடல் மீட்சியையும் உறுதி செய்கிறது.

இப்படி 6-6-6 முறையை முறையாக பின்பற்றுவதன்மூலம் தினமும் தோராயமாக 6,000 முதல் 7,000 அடிகள் வரை உங்களால் நடக்க முடியும். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, தினமும் 7,000 அடிகள் நடப்பது மூளை சக்தியை அதிகரிக்கவும் பல கடுமையான நோய்களைத் தடுக்கவும் போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மாலை 6 மணி நடைபயிற்சி:

உங்களால் தினமும் 6 முறை 6 நிமிடங்கள் நடக்க முடியவில்லை என்றால் காலை 6 மற்றும் மாலை 6 மணிக்கு தலா (30 – 30) என 60 நிமிடங்கள் நடக்கலாம். அதன்படி, தினமும் 60 நிமிடங்கள் நடப்பது கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது. இது இதயம் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

ALSO READ: தாய்ப்பால் கொடுக்கும்போது தாய் செய்யும் தவறுகள்.. ஏன் இதை தவிர்க்க வேண்டும்? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!

தினமும் அன்றாட ஏற்படும் மன அழுத்தத்தை போக்க மாலை நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். இது உங்கள் சோர்வை தணித்து மனதை புத்துணர்ச்சியடைய உதவும். மேலும், மாலை மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சி உடலை ரிலாக்ஸ் செய்து சிறந்த தூக்கத்தை தர உதவி செய்யும்.

செரிமானம் மற்றும் எடை கட்டுப்பாடு:

வழக்கமான நடைப்பயிற்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக வைப்பதனுடன், எடை அதிகரிக்காமல் கட்டுப்பாடுடன் இருக்க உதவுகிறது.