Health Tips: காலையில் தினமும் ஒரு கிளாஸ் பப்பாளி ஜூஸ்.. ஆரோக்கியத்திற்கு இது கேரண்டி..!
Morning Papaya Juice: காலை பப்பாளி ஜூஸ் குடிப்பதால் சருமம் பளபளப்பாகும், செரிமானம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மலச்சிக்கல் நீங்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும். பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.

பப்பாளி ஜூஸ்
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் சிறந்ததை கொண்டு தொடங்கும்போது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். ஆரோக்கியமான காலை பழக்கங்களை பொறுத்தவரை, எழுந்ததும் ஒரு ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதன்படி, நீங்கள் எப்போதாவது பப்பாளி ஜூஸை (Papaya Juice) காலையில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளீர்களா..? இல்லையென்றால், இப்போது இதை செய்ய வேண்டிய நேரம் இது. காலையில் பப்பாளி ஜூஸ் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மை பயக்கும். மேலும், இது உங்கள் சருமத்தை உள்ளிருந்து பளபளப்பையும் (Glow Naturally) தருகிறது. அதன்படி, இந்த பப்பாளி உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வருகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
சரும நன்மை:
பப்பாளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி இயற்கையான பளபளப்பை தருகிறது. அதன்படி, தினசரி பப்பாளி ஜூஸை உட்கொள்வது கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை குறைக்க உதவி செய்யும்.
ALSO READ: உடம்பில் இந்த பிரச்சனைகள் இருக்கா..? நீங்கள் ஏன் பீட்ரூட் சாப்பிடக்கூடாது தெரியுமா?
உடலில் நச்சுக்களை நீக்கும்:
காலையில் பப்பாளி ஜூஸ் குடிப்பது உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை நீக்கும். இதன் காரணமாக, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.
மலச்சிக்கல்:
பப்பாளியில் உள்ள நொதி பப்பேன் மற்றும் நார்ச்சத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி ஜூஸ் குடிப்பது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருந்து நிவாரணம் தரும்.
நோய் எதிர்ப்பு சக்தி:
பப்பாளியில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாறிவரும் வானிலையால் நோய்வாய்ப்படும் அபாயம் குறைத்து, உடலில் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
எடை இழப்பு:
பப்பாளி ஜூஸில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்ப செய்யும். இதனால், நீங்கள் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
பப்பாளி ஜூஸ் எப்படி செய்வது..?
- பப்பாளி துண்டுகள் – 1 கப்
- நீர் – அரை கிளாஸ்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- மிளகு அல்லது இஞ்சி – சிறிதளவு
- மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
- பப்பாளியின் நார்ச்சத்து முழுமையாக கிடைக்க வடிகட்டாமல் அப்படியே குடிப்பது நல்லது.
ALSO READ: தீராத நோயை தீர்க்கும் குணம் கொண்ட திப்பிலி.. எவ்வாறு உட்கொள்வது..?
ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கையை தொடங்குவதற்கு, காலை உணவு பழக்கத்தில் பப்பாளி ஜூஸை சேர்த்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன்மூலம் சருமம், செரிமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.