Health Tips: தீராத நோயை தீர்க்கும் குணம் கொண்ட திப்பிலி.. எவ்வாறு உட்கொள்வது..?

Long Pepper Health Benefits: திப்பிலி, ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை, செரிமானம், இருமல், சளி, உடல் பருமன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. திப்பிலி பொடி அல்லது மாத்திரை வடிவில் கிடைக்கிறது

Health Tips: தீராத நோயை தீர்க்கும் குணம் கொண்ட திப்பிலி.. எவ்வாறு உட்கொள்வது..?

திப்பிலி பண்புகள்

Published: 

10 Jul 2025 19:26 PM

சுக்கு, மிளகு, திப்பிலி என்று அழைக்கப்படும் திரிக்கடுகத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதில் சுக்கு, மிளகு தெரிந்த அளவிற்கு பலருக்கும் திப்பிலியை தெரியாது. திப்பிலி (Long Pepper) ஒரு காரமான மசாலா பொருட்கள் ஆகும். மருத்துவ குணங்களை கொண்ட இந்த மசாலா ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது ஆயுர்வேதத்தில் (Ayurvedic) பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. திப்பில், லாங்க் பெப்பர், பிப்பளி என பல பெயர்களும் உண்டு. இந்த மருந்தில் புரதம் (Protein), கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. தேனுடன் இதை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

திப்பிலியை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்:

வாயு, அஜீரணத்திற்கு நன்மை:

திப்பிலையை உட்கொள்வது நமது செரிமான அமைப்பை செயல்படுத்தி மேம்படுத்துகிறது. இதன் நுகர்வு நமது உணவை ஜீரணிக்க உதவும். இது வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்கும். மேலும், இது மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் தருகிறது.

ALSO READ: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் வெந்தயம் – எப்படி சாப்பிடுவது சிறந்தது?

இருமல், சளிக்கு நன்மை:

திப்பிலி மருந்தை உட்கொள்வது சளி மற்றும் இருமல் பிரச்சனையை குணப்படுத்துவதில் உதவியாக இருக்கும். இது மட்டுமல்லாமல் ஆஸ்துமா உட்பட சுவாசம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தரும்.

உடல் பருமனை சரிசெய்யும்:

திப்பிலி மூலிகையை உட்கொள்வது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவி செய்யும். அதன்படி, இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது. மேலும், இதை உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு, திப்பிலி உட்கொள்வது ஆக சிறந்த மருந்தாகும். இதில் இருக்கும் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது நமது உடலில் தொற்றுகள் மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

நினைவாற்றல்:

திப்பிலியின் பண்புகள் நமது நினைவாற்றலை அதிகரிக்க உதவி செய்யும். இது நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, செறிவையும் அதிகரிக்க செய்யும். தூக்கமின்மை பிரச்சனையால் போராடுபவர்களுக்கு, இந்த மருந்து நல்ல பலனை தரும்.

ALSO READ: கருப்பு மிளகில் இவ்வளவு சிறப்புகளா? 10 அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் இதோ!

இதை தவிர, திப்பிலியை உட்கொள்வது உடல் வலி மற்றும் மூட்டுவலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. இந்த மூலிகை புற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. திப்பிலி மாத்திரை வடிவத்திலும், பொடி வடிவத்திலும் கிடைக்கிறது. இதன் பொடியை தண்ணீரில் கரைத்து குடிக்கலாம். திப்பிலி பொடியை தேனுடன் சேர்த்து உட்கொள்வது இருமல் மற்றும் சுவாச பிரச்சனை, காய்ச்சல் போன்றவற்றை குறைக்க உதவும்.