Kidney Disease: உங்களுக்கு சிறுநீரக கற்கள் உள்ளதா? வெளியேறும் சிறுநீரின் நிறம் இப்படி இருக்கும்!
Kidney Disease Symptoms: சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஹெமாட்டூரியா என்று அழைக்கப்படுகிறது. இது ஆபத்தானது. இவை சிறுநீரக கற்கள், கட்டிகள் அல்லது தொற்றுகளாலும் ஏற்படலாம். ஹெமாட்டூரியா உள்ள நோயாளிகளில் சுமார் 25% பேருக்கு சிறுநீரகம், சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது.

சிறுநீரக பிரச்சனை
சிறுநீரின் நிறத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும், உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அறிகுறிகளை குறிக்கும். அசாதாரணமாக வெளியேறும் சிறுநீரின் நிறம் ஒரு முக்கிய சிறுநீரக கற்கள் (Kidney Stones) பிரச்சினையின் அறிகுறியாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் சில மாற்றங்கள் சிறுநீரக பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகங்கள் நமது உடலில் இருந்து அதிகப்படியான நீர், நச்சுகள் (Toxins) மற்றும் வளர்சிதை மாற்றக் கழிவுகளை சிறுநீர் மூலம் நீக்குகின்றன. ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் கழிக்க வேண்டும்.
சிறுநீரகங்களில் வேலை என்ன..?
சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து நச்சுகளை வடிகட்டி சிறுநீரை உற்பத்தி செய்கின்றன. எனவே, சிறுநீரின் நிறம், வாசனை மற்றும் அடர்த்தி நமது சிறுநீரகங்களின் ஆரோக்கியம் குறித்த ஆரம்ப அறிகுறிகளை நமக்குத் தரும். சிறுநீர் கழிக்கும் போது எரிவது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஆண்களில் புரோஸ்டேட் பிரச்சினைகள் அல்லது பெண்களில் சிறுநீர் பாதை பிரச்சினைகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
ALSO READ: உடலில் இப்படியான மாற்றங்களா..? இவை பித்தப்பைக் கற்களின் அறிகுறிகள்!
சாதாரண சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாகவும், லேசான வாசனையுடனும் இருக்கும். அதேநேரத்தில், அதிகபடியான கடுமையான வாசனை அல்லது அடர் மஞ்சள் நிறம் சர்க்கரை நோய் உள்ளதை குறிக்கலாம். மேலும், சிறுநீரில் துர்நாற்றம் வீசுவது தொற்றுநோய்க்கான அறிகுறியாகும். சிறுநீரில் திசுத் துகள்கள் இருப்பது சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். அதன்படி முதுகுவலி, வாந்தி, காய்ச்சல், சிறுநீரின் நிறம் மாறுதல் அல்லது சிறுநீரின் அளவு குறைதல் ஆகியவை சிறுநீரகக் கற்களின் அறிகுறிகளாக இருக்கலாம். அதிகப்படியான சோர்வு, வறண்ட சருமம், கண்களுக்குக் கீழே வீக்கம், கைகள் அல்லது கால்களில் வீக்கம் ஆகியவை சிறுநீரக செயல்பாடு குறைவதற்கான அறிகுறிகளாகும்.
சிறுநீர் கழிக்கும் அளவும் ஏன் முக்கியம்..?
நீங்கள் ஒருநாளைக்கு எவ்வளவு சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பது கூட முக்கியம். இந்த விஷயத்தில் பாலியூரியா, ஒலிகுரியா மற்றும் அனூரியா என 3 வகைகளாக பிரிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 3000 மில்லி அல்லது அதற்கு மேல் சிறுநீர் கழித்தால், அது பாலியூரியா என்று அழைக்கப்படுகிறது. இது சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். அதேபோல், நீங்கள் ஒரு நாளைக்கு 400 மில்லிக்கு குறைவாக சிறுநீர் கழித்தால், அது ஒலிகுரியா என்று அழைக்கப்படுகிறது. இது சிறுநீரக பாதிப்பு, நீரிழப்பு, சிறுநீரக கற்கள் அல்லது இதய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் சிறுநீர் கழிப்பதை நிறுத்தினால், அது அனூரியாவாகும். இது பெரிய சிறுநீரக பாதிப்பு அல்லது சிறுநீர் பாதையில் கற்களின் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரில் இரத்தம் வெளியேறுவது ஹெமாட்டூரியா என்று அழைக்கப்படுகிறது. இது சிறுநீரக கற்கள், கட்டிகள் அல்லது தொற்றுகளாலும் ஏற்படலாம். ஹெமாட்டூரியா உள்ள நோயாளிகளில் சுமார் 25% பேருக்கு சிறுநீரகம், சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது.
வெள்ளை சிறுநீர் வெளியேறுவது நல்லதா..?
வெள்ளை சிறுநீர் என்றால் நல்லது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், வெள்ளை அல்லது பால் போன்ற சிறுநீர் கடுமையான சிறுநீர் பாதை தொற்று அல்லது சிறுநீரில் சீழ் இருப்பதாலும் ஏற்படலாம். ஒரு காரணம் சைலூரியா, அதாவது உண்ணும் கொழுப்பு சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது.
நுரை அல்லது குமிழி போன்ற சிறுநீர் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இது சிறுநீரில் புரத இழப்பு எனப்படும் புரோட்டினூரியாவால் ஏற்படுகிறது. இது சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீர் பாதை தொற்று அல்லது சிறுநீரக கற்கள் ஆகியவற்றால் ஏற்படலாம்.
ALSO READ: மழைக்காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏன் ஏற்படுகிறது..? தடுப்பது எப்படி?
உங்கள் உடல் உங்கள் சிறுநீரின் மூலம் முக்கியமான தகவல்களை வெளியிடுகிறது. இதன் நிறம், வாசனை அல்லது அளவு ஆகியவற்றில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட கடுமையான சிறுநீரக பிரச்சனையின் முதல் அறிகுறியாக இருக்கலாம். எனவே ஏதேனும் மாற்றங்களை நீங்கள் கவனித்தால், தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வது நல்லது.