Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்க 5 எளிய வழிகள்

Beat Bad Cholesterol : மோசமான வாழ்க்கை முறையால் இன்று பலரும் இளம் வயதிலேயே இதய நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரத்த நாளங்களில் சேரும் இந்த கொழுப்பு, ரத்த ஓட்டத்தை தடைசெய்து, இதயத்துக்கும் மூளைக்கும் ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்கும்.இதனை இயற்கை முறையில் தவிர்ப்பது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்க 5 எளிய வழிகள்
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 11 May 2025 18:21 PM

மோசமான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களாலும் இன்று பலரும் இளம் வயதிலேயே இதய நோய் (Heart Disease), சர்க்கரை நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கெட்ட கொழுப்பு சத்துக்கள் (Bad Cholesterol), இதயம் சம்பந்தப்பட்ட பல நோய்களின் முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த மோசமான கொழுப்புகள் ரத்த நாளங்களில் படிந்து, அவற்றை கடுமையாக பாதிப்பதுடன் நரம்பு மண்டலங்களையும் பாதிக்கின்றன. இதனால், இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜன் விநியோகமும் தடைபடுகிறது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், மோசமான கொழுப்பை இயற்கையாக குறைக்கும் சில எளிய வழிகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

காலை உணவில் ஓட்ஸ் அடிக்கடி சேர்க்கவும்

ஓட்ஸ் உடலுக்கு மட்டுமல்ல, இதய ஆரோக்கியத்துக்கும் மிகவும் பயனுள்ளதாகும். இதில் அதிகளவில் பீட்டா-க்ளூகான் எனப்படும் கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது. இது செரிமான மண்டலத்தில் கொழுப்புகள் படிந்து, அது ரத்த ஓட்டத்தில் கலப்பதைத் தடுக்கிறது. எனவே, தினமும் காலை உணவாக ஓட்ஸை எடுத்துக்கொள்வது நல்லது.

தினமும் வேகமாக நடக்க பழகுங்கள்

உடற்பயிற்சி உங்கள் இதயத்திற்கு சிறந்தது. அதற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்யத் தேவையில்லை. வாரத்திற்கு ஐந்து நாட்கள், தினமும் 30 நிமிடம் வேகமாக நடந்தால் அதுவே போதுமானது. இது நன்மை தரும் எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கவும், மோசமான எல்டிஎல் (Low-Density Lipoprotein) கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. நேரம் இல்லையெனில், உணவுக்குப் பிறகு இருமுறை 15 நிமிடங்கள் நடப்பது போதும்.

உண்ணும் உணவில் டிரை ஃப்ரூட்ஸ் சேர்க்கவும்

முந்திரி, பாதாம், வேர்க்கடலை, வால்நட் மற்றும் ஆமணக்கு விதைகள் போன்ற டிரை ஃப்ரூட்ஸ் வகைகள், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அவை நல்ல கொழுப்பு சத்துக்களையும் புரதங்களையும் கொண்டுள்ளன.

 ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள்

ஆலிவ் எண்ணெய் உடலில் நன்மை தரும் கொழுப்புகளை பாதுகாப்பதற்கும், மோசமான கொழுப்புகளை குறைக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. காய்கறிகளை சமைக்கும் போதோ அல்லது சாலட்களில் இந்த ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம். சப்பாத்தி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

தினமும் கிரீன் டீ குடிக்கவும்

கிரீன் டீயில் உள்ள “கேட்டசின்கள் எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்கள், மோசமான கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டவை. அவை எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அதனுடைய ஆக்ஸிடேஷனை தடுத்து, ரத்த நாளங்களில் ஏற்படும் சேதத்தை தடுக்கும். தினமும் 2 முதல் 3 கப்கள் சர்க்கரை இல்லாமல் கிரீன் டீ குடிப்பது எல்டிஎல் அளவைக் குறைக்க உதவும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!...
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!...
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA...
நெட் தேர்வு 2025: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!
நெட் தேர்வு 2025: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!...
ரத்த அழுத்தம் பிரச்னை.. தீர்வு தரும் பதஞ்சலியின் BPGRIT Vati
ரத்த அழுத்தம் பிரச்னை.. தீர்வு தரும் பதஞ்சலியின் BPGRIT Vati...
ஐபிஎல் பங்கேற்க வர மறுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்..? என்ன காரணம்?
ஐபிஎல் பங்கேற்க வர மறுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்..? என்ன காரணம்?...
ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதற்கு உண்மையான காரணம் இதுதான்...
ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடியதற்கு உண்மையான காரணம் இதுதான்......
சனி பகவான் கொடுக்கப்போகும் நன்மை.. இந்த 3 ராசிக்கு செம அதிர்ஷ்டம்
சனி பகவான் கொடுக்கப்போகும் நன்மை.. இந்த 3 ராசிக்கு செம அதிர்ஷ்டம்...
தியானத்திற்கு சென்ற பின் காணாமல் போன பத்மஸ்ரீ விருதாளர் சுப்பண்ணா
தியானத்திற்கு சென்ற பின் காணாமல் போன பத்மஸ்ரீ விருதாளர் சுப்பண்ணா...
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!...
தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்...
தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் நடிகை பிரியங்கா மோகன்......