குழிதோண்டி புதைக்கிற மாதிரியான விசயத்தை பண்ணாதீங்க – பாடகர் சத்யன் மகாலிங்கம்
Viral Singer Sathyan: சமீபத்தில் இசையமைப்பாளர்களால் இசையமைக்கும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் முன்னதாக இசையமைக்கப்பட்ட பாடல்கள் திடீரென வைரலாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ரோஜா ரோஜா பாடலின் மூலம் இணையத்தில் வைரலான பாடகர் தான் சத்யன்.

பாடகர் சத்யன் மகாலிங்கம்
சமூக வலைதளத்தின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்த பிறகு எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அது ரசிகர்களிடையே மிகவும் எளிதாக பரவி விடுகின்றது. சமீப காலமாக வரும் படங்களில் இருக்கும் பாடல்கள் அவ்வபோது இணையதளத்தில் வைரலானாலும் அதனைத் தொடர்ந்து புதியப் படம் வந்தால் முன்னதாக வந்த பாடல்களின் மோகம் ரசிகர்களிடையே குறைந்துவிடும். இப்படி இருக்கும் சூழலில் தற்போது வரும் படங்களில் முன்னதாக படங்களில் வெளியான பாடல்களைப் பயன்படுத்தும் வழக்கமும் மிகவும் சாதாரண நிகழ்வாகவே உள்ளது. இதனால் தற்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு முன்பு எப்படி எல்லாம் பாடல்கள் இருக்கும் என்ற அறிமுகமும் நன்கு கிடைக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பாடகர் சத்யன் மகாலிங்கம் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய ரோஜா ரோஜா பாடல் இணையத்தில் படு வைரலாக மாறியது.
காதலர் தினம் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அந்தப் பாடல் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வைரலானது பாடகர் சத்யனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரிடம் பல சாட்லைட் சேனல்களும் யூடியூப் சேனல்களும் தொடர்ந்து பேட்டியெடுத்தது வந்தது. அந்தப் பேட்டியில் பாடகர் சத்யன் மகாலிங்கம் பேசியது ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தது.
தவறான செய்திகளை பரப்பாதீர்கள் – சத்யன் மகாலிங்கம் வேண்டுகோள்:
இந்த நிலையில் பாடகர் சத்யன் மகாலிங்கம் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது. பல ஊடகங்கள் நான் என்ன பேசினேன் என்பதை தெளிவாக செய்தியாக்கியுள்ளனர். ஆனால் சில ஊடகங்கள் நான் பேசியதை முற்றிலும் வேறாகவும், நான் பேசாத விசயங்களையும் தொடர்ந்து செய்திகளாக்கி வருகின்றனர்.
அவர்களின் சுய லாபத்திற்காக சில மீடியாக்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இது இத்தனை ஆண்டுகளாக உழைத்து முன்னேறிய ஒருவரின் உழைப்பை குழி தோண்டி புதைப்பது போல உள்ளது. அதனால் தயவு செய்து அதனை செய்யாதீர்கள் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பாடகர் சத்யன் மகாலிங்கம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ:
Also Read… விடாமுயற்சி படம் வெற்றிப்படம்தான் – இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன விசயம்!