Puri sethupathi: வருத்தத்துடன் பூரிசேதுபதி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ!

Puri Sethupathi Shooting Wrap: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரை தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம்தான் பூரிசேதுபதி. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயங்கிவந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக படக்குழு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Puri sethupathi: வருத்தத்துடன் பூரிசேதுபதி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ!

பூரி சேதுபதி படப்பிடிப்பு

Published: 

24 Nov 2025 13:03 PM

 IST

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தில் நடிகை நித்யா மேனனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025 ஜூலை மாத இறுதியில் வெளியான நிலையில், சூப்பர் ஹிட் வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்திற்கு அடுத்ததாக விஜய் சேதுபதி தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் பரவி வந்தது. இதை விஜய் சேதுபதியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அந்த படம்தான் பூரி சேதுபதி (PuriSethupathi). இந்த படத்தை தெலுங்கு இயக்குநரும் தயாரிப்பாளருமான பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கி வந்தார். இவர் இறுதியாக விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான லைகர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் இவருக்கு சரியான வரவேற்பை கொடுக்கவில்லை என்று கூறலாம். இந்த படத்தை அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்த படம்தான் பூரிசேதுபதி.

இப்படமானது தற்காலிகமாக பூரி சேதுபதி அழைக்கப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஜூலை மாதத்தில் தொடங்கிய நிலையில், தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!

பூரி சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :

இந்த வீடியோவில் விஜய் சேதுபதி, இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான சார்மி போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீடியோவில் வருத்தத்துடன் இந்த பூரி சேதுபதி பட ஷூட்டிங் நிறைவடைந்ததாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

பூரி சேதுபதி படத்தின் அடுத்த அப்டேட் என்ன :

இந்த பூரி சேதுபதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர் தனுஷின் வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை தபு நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் எடையை குறைக்க செய்த விஷயம் இதுதான்.. உண்மையை கீர்த்தி சுரேஷ்!

இந்த படத்தின் டைட்டில் கடந்த 2025 அக்டோபர் மாதத்திலேயே வெளியாகவிருந்த நிலையில், கரூர் சம்பவம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசர் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் போன் சார்ஜ் செய்யும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. வெடிக்கும் அபாயம் அதிகம்!!
இனி ஹோட்டல், மால், அலுவலங்களிலும் ஆதார் கட்டாயம்.. புதிய விதிமுறைகள்!!
மலையாள பிக் பாஸ் சீசன் 7.. டிஆர்பி-யில் புதிய சாதனை..
TRAI இன் புதிய 160 எண்.. இதன் சாராம்சம் என்ன?