Vijay Sethupathi : வசூலில் வெற்றி பெற்றதா விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’.. மொத்த வசூல் இவ்வளவுதானா?

Ace Movie Total Box Office Collection : நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஏஸ். இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியான இந்த படமானது கடந்த 2025, மே 23ம் தேதியில் வெளியானது. இந்த படமானது வெளியாகி 2 வாரமான நிலையில், அதன் மொத்த வசூல் குறித்துப் பார்க்கலாம்.

Vijay Sethupathi : வசூலில் வெற்றி பெற்றதா விஜய் சேதுபதியின் ஏஸ்.. மொத்த வசூல் இவ்வளவுதானா?

ஏஸ் படம்

Published: 

01 Jun 2025 19:51 PM

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ஏஸ் (Ace). இந்த படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar) இயக்கியிருந்தார். விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில் அவருக்கு ஜோடியாகப் பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Actress Rukmini Vasanth)  நடித்திருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சூதாட்டம் மற்றும் அதைச் சார்ந்து நடக்கும் அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் முழுவதும் நகைச்சுவை கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடித்து வந்தது.

அதைத் தொடர்ந்து இந்த படமானது கடந்த 2025, மே 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் பெரிதாக நடக்கவில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் கூட பலருக்குத் தெரியவில்லை.

இந்த படமானது வெளியாகி சுமார் 1 வாரத்தைக் கடந்த நிலையில், இதுவரை மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இந்த படமானது இதுவரை வெறும் ரூ 7 கோடிகள் மட்டும்தான் வசூல் செய்துள்ளதாம். இந்த தகவலானது தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

ஏஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் விஜய் சேதுபதியின் இந்த படத்தில் இவருடன் நடிகர்கள் யோகி பாபு, ருக்மிணி வசந்த், ரமேஷ் திலக், மற்றும் திவ்யா பிள்ளை எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. ஆனால் மற்ற படங்களை ஒப்பிடும்போது நடிகர் விஜய் சேதுபதியின் இந்த ஏஸ் படத்திற்குப் பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை.

நடிகர் விஜய் சேதுபதி ஏஸ் பட வரவேற்பு இல்லாதது குறித்து பேச்சு :

இந்த படமானது கடந்த 2025, மே 23ம் தேதியில் வெளியான நிலையில், ரிலீஸை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார். அதில் அவர், “இந்த ஏஸ் படம் திரைக்கு வந்தது பலருக்கும் தெரியவில்லை. அது எங்களுடைய தவறுதான், படத்தை ப்ரோமோஷன் செய்ததற்குப் பிறகு வெளியிட்டிருக்கலாம். ஆனால் எங்களிடம் போதுமான நேரமில்லை, மேலும் இந்த ஏஸ் படத்தை உடனடியாக வெளியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும் இந்த படம் மக்களுக்குத் தெரியாததற்குக் காரணம் நாங்கள்தான் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.