பக்கா ஆக்சன் எண்டர்டெயினர் – வெளியானது விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் டிரெய்லர்!

Vijay Devarakonda's Kingdom Trailer : கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் கிங்டம். இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பக்கா ஆக்சன் எண்டர்டெயினர் - வெளியானது விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் டிரெய்லர்!

விஜய் தேவரகொண்டா

Published: 

26 Jul 2025 23:24 PM

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்கடம் படம் வருகிற ஜூலை 31, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இநத்ப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆந்திர மாநிலம் திருப்பதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் தேவரகொண்டா பேசியது ஹைலைட்டாக அமைந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

ஜெர்சி மூவி என்ற கிளாசிக் படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரி இந்த படத்தை இயக்கியுள்ளதால், எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி முழுமையான ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாக்கியுள்ளார். இதுவரை காதல் மற்றும் குடும்பக் கதைகளால் ஈர்க்கப்பட்ட விஜய் தேவரகொண்டா, முழு ஆக்சன் ஹீரோவாக இந்தப் படத்தில் களமிறங்கியுள்ளார். அதற்கு ஏற்ப டிரெய்லரில் ஆக்‌சன் காட்சிகள் அனல் பறக்கின்றன.

இதையும் படிக்க : எங்களை யாராலும் தடுக்க முடியாது… கிங்டம் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா அதிரடி!

கிங்டம் படத்தின் டிரெய்லர் குறித்த பதிவு

 

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து சத்யதேவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவுக்கும் பாக்யஸ்ரீ போர்ஸுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களைக் கவரும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் ஒரு ஸ்பை திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இதையும் படிக்க : டிக்கெட் முன்பதிவில் சாதனை.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்துக்கு அமோக வரவேற்பு!

இந்தப் படத்தின் டிரெய்லரில் விஜய் தேவரகொண்டாவின் தோற்றம் ஹைலைட்டாக அமைந்துள்ளது. இதில் அவர் மொட்டையடித்த தலையுடன் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக இருந்தார். டிரெய்லரை வைத்து பார்க்கும்போது, இந்தப் படம் சகோதரர்களுக்கு இடையிலான பாசத்தை சொல்லும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்திரனின் இசை ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.  இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜூலை 31, 2025 அன்று வெளியாகிறது.