Nooru Saami: மாய கனவோ… விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் முதல் பாடல் வெளியானது!
Nooru Saami Movie First Single: நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் இயக்குநர் சசியின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம்தான் நூறு சாமி. இந்த படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. மாய கனவோ என்ற பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்துவருகிறது.

மாய கனாவோ பாடல்
தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் படங்களில் பணியாற்றிவருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவர் ஆண்டிற்கு 2 முதல் 3 படங்களில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சக்தித் திருமகன் (Sakthi Thirumagan). இந்த படமானது அரசியல், கிரைம் திரில்லர் போன்ற கதைக்களத்தில் தயாராகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக இவர் நடித்துவந்த புது படம்தான் “நூறு சாமி” (Nooru saami). இந்த படத்தை பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களை இயக்கியிருந்த, இயக்குநர் சசி (sasi) இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனி இதுவரை நடித்திடாத வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது முழுக்க எமோஷனல் கதையாக தயாராகியுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் முதல் பாடலாக தயாராகியிருந்ததுதான் மாய கனவே (Maaya kanavo). இப்பாடலை பாடலாசிரியர் மோகன் எழுத, சின்மயி மற்றும் கபில் கபிலன் இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், மக்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: நானி சார் எழுப்பும் சுவரில் ஒரு செங்கலாக இருக்க விரும்புகிறேன் – கென் கருணாஸ்
நூறு சாமி திரைப்படத்தின் மாய கனவே பாடல் குறித்த எக்ஸ் பதிவு:
இரு விழிகள் பேசித் தோற்கும் கலை… #MaayaKanavo ❤️
The soul stirring first single from #Noorusaami is out now!
Let the magic of love take over ✨
A @imbalajisriram Musical
🎙️ @Chinmayi @Kapilkapilan_
✒️ @Lyricist_Mohan@vijayantony #Sasi pic.twitter.com/JZip4782mT— VijayAntonyFilmCorporation (@vijayantonyfilm) March 25, 2026
நூறு சாமி திரைப்படம் எப்போது வெளியாகிறது:
இந்த நூறு சாமி படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி விவசாயியாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்வாசிகா நடித்துள்ளார். இவர் லப்பர் பந்து படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சூர்யாவின் கருப்பு படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் நடிகர்கள் அஜய் திஷன், கருணாகரன், லிஜோமோல் ஜோஸ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழிலும் வெளியாகும் சாய் பல்லவியின் இந்தி திரைப்படம்.. வெளியானது ‘ஒரு நாள்’ படத்தின் ட்ரெய்லர்!
இதை இயக்குநர் சசி இயக்க, நடிகர் விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இந்த படத்தின் பாடலை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் 2026 மே 1ம் தேதியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2026ம் ஆண்டில் நூறு சாமி படம் விஜய் ஆண்டனிக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.