Vetrimaaran : சிம்புவுடன் புதிய படத்தில் இணைவது தனுஷிற்கு பிரச்னையா? – வெற்றிமாறன் கொடுத்த விளக்கம்!

Vetrimaaran Clarification : தமிழ் சினிமாவில் உச்ச இயக்குநர்களில் ஒருவர்தான் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் தமிழில் சில படங்களே வெளியாகியிருந்தாலும், அவை அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. இவரின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படம் உருவாகிவரும் நிலையில், அந்த படத்தில் சிலம்பரசன் இணைவது தனுஷிற்கு பிரச்சனையா என்பது குறித்து வெற்றிமாறன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Vetrimaaran : சிம்புவுடன் புதிய படத்தில் இணைவது தனுஷிற்கு பிரச்னையா? - வெற்றிமாறன் கொடுத்த விளக்கம்!

தனுஷ், சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன்

Updated On: 

30 Jun 2025 15:20 PM

இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran)  இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை 2 (Viduthalai 2). இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi)மற்றும் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியிருந்தது. இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவுடன் (Suriya) வாடிவாசல் (Vaadivaasal) படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், அவர் தற்போது சிலம்பரசனுடன் (Silambarasan) புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், அது குறித்து இயக்குநர் வெற்றிமாறனே விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், சிலம்பரசனுடன் புதிய திரைப்படத்தில் வெற்றிமாறன் இணைந்துள்ள நிலையில், இதற்கு தனுஷ் (Dhanush)  எதிர்ப்பு தெரிவித்ததாகச் சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அது குறித்து வெற்றிமாறன் விளக்கம் கொடுத்துள்ளார். சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் பேசிய வெற்றிமாறன், சிலம்பரசனும் என்னிடம் தனுஷிற்கு எதாவது பிரச்சனை இருக்கிறதா? என்று கேட்டார் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

தனுஷ் எதிர்ப்பு தெரிவித்தாரா? வெற்றிமாறன் விளக்கம்

இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அந்த நேர்காணலில் பேசிய அவர், “நான் தனுஷிடம், நான் சிம்புவுடன் புதிய படம் பண்ணப்போகிறேன் என்று கூறியிருந்தேன். அதற்கு தனுஷ், “சார் உங்களுக்கு இது கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும், சிம்புவுக்கும் இது வித்தியாசமாக இருக்கும். உங்களுடன் இணைந்து வேலை செய்வதற்கு சிம்புவிற்கு புது அனுபவம் கிடைக்கும்” என்று தனுஷ் கூறினார். மேலும் சிம்புவும் சில நாட்களுக்கு முன் என்னை நேரில் சந்தித்தார், அப்போது அவர் என்னிடம், “சார் நானும் சில நியூஸ் கேள்விப்பட்டேன், தனுஷ் சாருக்கு விருப்பம் இல்லாதது போல கூறுகின்றனர். உங்களுக்கு எப்படி படம் பண்ணவேண்டுமோ அதை நீங்கள் முடிவு செய்துக்கொள்ளுங்கள். வடசென்னை படத்தின் கதைக்குள், இந்த புதிய படத்தை இணைந்தாலும் சரி அல்லது புதிய வித படமாக கொண்டுவந்தாலும் சரி. உங்களுக்கு எதை பண்ணவேண்டுமோ அதை பண்ணுங்கள். தனுஷ் சாருடன், நீங்கள் வைத்திருக்கும் அக்ரீமெண்டிற்கு எந்தவித பிரச்சனையும் வராத அளவுக்கு இந்த படத்தை உருவாக்குங்கள் என்றுதான் சிலம்பரசன் என்னிடம் கூறியிருந்தார் என இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் கொடுத்துள்ளார்.

வெற்றிமாறன் பேசிய வீடியோ :

வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணி :

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகிவரும் இப்படமானது, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகிவருகிறது. இந்த படத்தில் அறிமுக வீடியோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வந்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இப்படத்தின் அறிவிப்புகள் வரும் 2025, ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!